11 மார்., 2016

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று திடீரென இலங்கையில் அவசரமாக இன்று தரையிறக்கப்பட்டது.
டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா பயணம் செய்து கொண்டிருந்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அவசரமாக குறித்த விமான தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவலகள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் பயணம் செய்த அவுஸ்திரேலிய பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்படக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.