புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

விஜயகாந்தை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம்: பிரேமலதா அழைப்பு!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என்று பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.


வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த கூட்டணி குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

சென்னை, ராயப்பேட்டையில் தே.மு.தி.க. மகளிரணி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ''எனது கட்சியை வழி நடத்த ஊடகங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டாம். எனது கட்சியை நான் அருமையாக வழி நடத்தி செல்கிறேன். நான் தெளிவாக இருக்கிறேன்.

கூட்டணிக்காக பேரம் பேசுவதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் பேரம் பேசவில்லை. பேரம் பேசவில்லை என்றால் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டியதுதானே என கூறுகின்றனர். கூட்டணி குறித்து சொல்ல வேண்டுமா, இந்த தேர்தலை தே.மு.தி.க. தனியாகத்தான் சந்திக்கப் போகிறது" என்று கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்து தனது பேச்சை நிறைவு செய்தவுடன் பிரேமலதா மீண்டும் பேசினார். அப்போது அவர், ''கேப்டன் (விஜயகாந்த்) அறிவிப்பால் கடந்த 3 மாதமாக இருந்த அலை முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் தமிழக அரசியல் விறுவிறுப்படையும். அந்தந்த கட்சிகள் அறிவிப்பை வெளியிடுவார்கள். 

தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்த இளங்கோவன், வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன், பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஜவடேகர், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தன்னுடைய உள்ளம் கனிந்த நன்றியை கேப்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், 7 பேர் குழுவினர் நாளை முதல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் எங்களது 7 பேர் குழுவினருடன் பேசலாம்.
குறிப்பாக, விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று என்ற கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணி பேசலாம்" என்றார்.

ad

ad