புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.


கடந்த 2000ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியதும், அன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரியில் சாலை மறியல்களும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தபோது சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்தை தர்புரியில் வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தது. பேருந்தில் இருந்து மற்ற மாணவிகள் குதித்து தப்பிக்க, கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மாணவிகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘‘சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். எனவே வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்’’ என இறந்துபோன மாணவி கோகிலவாணியின் அப்பா வீராசாமி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இதையடுத்து, 2003-ம் ஆண்டு இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது. இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள், ஜிஎஸ் சிங்வி, பி.எஸ். சௌகான் ஆகியோர் விசாரித்தனர். சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி உறுதி செய்தனர்.

இதையடுத்து, குற்றவாளிகள் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அந்த மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனு கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையை குறைத்ததோடு, உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட தவறு என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்க

ad

ad