புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2018

ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2006 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் தொடர்பில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கைச்சாத்திட்டார்.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அனில் குணரத்ன, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எதாஉட ஆரச்சிகே, காமினி ரொஹான் அமரசேகர, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் மல்லவ ஆரச்சிகே டொன் என்டனி ஹரல்ட், இலங்கை கணக்கீட்டு, கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபையின் பணி்ப்பாளர் நாயகம் வசந்தா ஜயசீலி கபுகம ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்

ad

ad