புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

ஐரோப்பாவிற்குள் நுழைய வெளிநாட்டினருக்கு தடை: எல்லைகளை மூட ஒப்புக்கொண்ட தலைவர்கள்


கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக, 30 நாட்களுக்கு எல்லைகளை மூட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8000ஐ எட்டியுள்ளது.

152 நாடுகள் இப்போது COVID-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஹென்றி கூறியுள்ளார்.

வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்திருக்கும் நிலையில், ஐரோப்பா கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுவதற்கான பல்வேறு முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளின் தலைவர்கள் ஒரு பயணத் தடையை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.


இதன்மூலம் அடுத்த 30 நாட்களுக்கு வெளிநாட்டினர் யாரும் ஐரோப்பாவுக்குள் நுழைய முடியாது. இந்த பயணக்கட்டுப்பாடானது உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் இத்தகைய முன்மொழிவுக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு நிறைய கிடைத்ததாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியுள்ளார்.

கிழக்கில், பெலாரஸ், ​​மால்டோவா, ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான எல்லைகள் மூடப்பட்டுள்ளன, மத்திய சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எல்லைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.