புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

கனடிய பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ள மேலதிக சலுகைகள் :

கனெடிய பிரதமர் 18-03-2020 இன்று கனெடிய குடிமக்களுக்கு மேலும் பல அரச மானிய சலுகைகளை அறிவித்துள்ளார். கோரோனோ பரவல் காரணமாக உலகமே பல அவசரகால நிலைகளை பிரகடனப்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர். இயல்ப்பு வாழக்கை முடக்கம் கண்டுள்ளது. பொதுமக்களது அன்றாட தேவைகளை இலகுவாக்கும் வகையில் கனடிய பிரதமர் அறிவித்துள்ள மேலதிக சலுகைகளாவன..

** குடும்பங்களுக்கான Canada Child Benefit கொடுப்பனவுகளை அதிகரித்தல்.

** சிறு வணிக நிறுவனங்கள் பணியாளர்களை தொடர்ந்தும் வைத்திருக்க, மானியங்களை வழங்குதல் - Wage Subsidy

** மாணவர் கடன் (Student Loan) கொடுப்பனவுகள் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தல்.

** வேலைக் காப்புறுதி பெற முடியாதவர்களுக்கு அவசர நிதியுதவி வழங்கல்.

** ஆகஸ்ட் மாதம் வரை, வரிக் கொடுப்பனவுகளை ஒத்திவைத்தல். ($55 பில்லியன்)

பொது சுகாதாரம் ஒருபோதும் நிதியோடு தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ள பிரதமர், கனடியர் நீங்கள் யாராக இருந்தாலும், என்ன தொழில் செய்தாலும், முதலில் உடல்நலத்தைக் கவனிக்கும் படியும், கனடியர் ஒவ்வொருவரும் தமது குடுப்பதைக் கவனிக்க, மளிகைப் பொருள்களை வாங்க, வாடகை வழங்க போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வதே தமது கடமை என்றும் கூறியுள்ளார் !