புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2020

பிரான்ஸ் - வீட்டை விட்டு வெளியேறினால் €375 தண்டப்பணம்..


வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
€135 களில் இருந்து தற்போது €375 களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு 'நான்காம் நிலை தண்டபணம்' ஆகும். அதாவது வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற காரணங்களுக்காக இந்த தொகை தண்டப்பணமாக அறவிடப்படும். அந்த தொகையையே தற்போது கொரோனாவுக்கு எதிராக போராட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த குற்றத்துக்காக €38 கள் (இரண்டாம் நிலை தண்டப்பணம்) நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிலமைகள் மேலும் இறுக்கமாக, தண்டப்பணத்தையும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad