புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

தமிழினத்துரோகிஜெயானந்தமூர்த்தி தூக்கி வீசப்பட்டார் -ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கினார் கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் இருந்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி விலக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வெளியிட்டுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி உபதலைவராக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரின் ஆலோசனைக்கு இயங்காது, கட்சியின் யாப்பு, கொள்கைக்கு முரணாக தன்னிச்சையாக செயற்பட்டதன் காரணமாக தலைமை, மத்தியகுழு தீர்மானத்திற்கு அமைவாக இன்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க கட்சியின் அனைத்துவித பொறுப்புக்களிலிருந்தும் ஜெயானந்தமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது