புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு பகுதியிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபத்தில் உள்ள 7 பொலிஸ் பிரிவுகளிலும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரவில, மாதம்பை, கொஸ்வத்த, தங்கொட்டுவ, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ ஆகிய பொலிஸ் பகுதிகளிலும், புத்தளம் பொலிஸ் பிரிவில், முந்தல், உடப்பு, கற்பிட்டி, நவகத்தேகம, பள்ளம, களுகரகஸ்வெவ, ஆனைமடு, வனாத்தவில்லுவ, சாலியவெவ, நவகத்தேகம ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது