புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்

கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த பிரபல நடிகரான Idris Elba நேற்று வெளியிட்ட டுவிட்டர் வீடியோவில், தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்ததாக தெரிவித்தார்.

இதோடு தற்போது வரை எந்தவொரு அறிகுறியும் தனக்கு இல்லை எனவும் கூறினார்.


மேலும் மக்கள் social distancing பற்றி யோசிக்கவேண்டிய தருணம் இது. கைகழுவுவது, மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது மட்டுமே இதை தடுக்க வழி என கூறியுள்ளார். இந்த சூழலில் இருவாரங்களுக்கு முன்னர் லண்டனில் We Day UK தொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் Sophie மற்றும் Idris Elba ஆகிய இருவருமே கலந்து கொண்டனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இருவரும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை Sophie இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

அதில், உங்களை அன்பாகக் காட்டி, அதே அன்பை உலகுக்கு வழங்குங்கள் என பதிவிட்டிருந்தார்.

Sophie-வுக்கு பின்னர் Idris-க்கு கொரோனா வந்துள்ளதால் அவருக்கு ஏற்பட்ட அறிகுறிக்கு பின்னர் இவருக்கு பரவியிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.