புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2020

கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை

கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்த போதுமான படுக்கைகள் இல்லாத சூழல் நிலவுகிறது.

80 முதல் 95 வயதுடையவர்கள் சுவாச கோளாறு பிரச்சனைகளில் தவித்து வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பெர்கமோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர் கிறிஸ்டியன் சளரொளி, நாளிதழுக்கு அளித்த செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

இது பயங்கரமான செய்தியாக இருந்தாலும், நாம் வருந்தும் வகையில் இது உண்மை நிலைதான். ஒரு வேலை அதிஷ்டவசமாக உயிர் பிழைப்பார்களோ என்ற எண்ணத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இத்தாலியில் நிலவுகிறது.

சிகிச்சை அளிப்பது அல்லது உயிரிழக்க அனுமதிப்பது இந்த இரண்டில் ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது ஏன் ?

கொரோனா வைரஸ் இத்தாலியில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இத்தாலியில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே இரண்டாவது அதிக முதியோர்கள் உள்ள நாடாக இத்தாலி அறியப்படுகிறது. முதியோர்கள் அதிகம் உள்ள முதல் நாடு ஜப்பான்.



ad

ad