புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.

அதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கெவிந்து குமரதுங்க, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அலி சப்ரி, அஜித் நிவார்ட் கப்ரால், சுரேன் ராகவன், திலகரத்ன டில்ஷான், டாக்டர் சரிதா ஹெரத், டிரான் அலெஸ், ஜயந்த கெட்டகொட மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், குணரத்ன வன்னிநாயகே, மயந்த திசாநாயக்க, ஷிரால் லக்திலக, சமீர பெரேரா, அர்ல் குணசேகர, எரான் விக்ரமரத்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்