புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

கோத்தா - மைத்திரி இடையே பிளவா = மீண்டும் சஜித் பக்கம் தாவுகிறார் மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுராதரபுரத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறும்வரை மைத்திரிபாலவை நெருக்கமாக வைத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போது அவரைத் துரத்த முயற்சிக்கின்றது என்றும் கமகே குறிப்பிட்டுள்ளார்.

முடிவில் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்