புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஏப்., 2020

பிரித்தானியாவில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பலி! விமானம் முழுவதும் அவசர உபகரணங்களை அனுப்பி உதவிய நாடு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் உயிர்காக்க பயன்படும் உபகரணங்களை நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளது.

கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழப்புகள் 10,000-ஐ நெருங்கி வருகிறது.

இதனால் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு இன்னும் சில நாட்கள் நீடிக்கப்படலாம் மக்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் பிரித்தானியாவுக்கு துருக்கி அவசர உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளது.

அறுவைசிகிச்சை முகமூடிகள், எண் 95 கொண்ட மிகவும் பாதுகாப்பான முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு உடை என தனிப்பட்ட பாதுகாப்புப் பொருள்களைக் கொண்ட ஜெட் விமானம் ஒன்று துருக்கியின் அங்காராவிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் லண்டனில் தரையிறங்கியது.

துருக்கிய அனுப்பிய பாதுகாப்பு உபகரணங்களின் பெட்டியில், இருளுக்குப் பிறகு, மிகவும் பிரகாசமான சூரியன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது