புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஏப்., 2020

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

பீலா ராஜேஷ் கூறியதாவது:-“2 அரசு மருத்துவர்கள்,2 ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள்,4 தனியார் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியர்கள் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்களை சோதனை செய்வதற்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்.

பிளாஸ்மா சிகிச்சை முறைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஓரிரு நாளில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த சிகிச்சை முறையை முழுவதுமாக அறிந்து அதை பயன்படுத்தி சோதனை செய்ய இருக்கிறோம்.

இது ஒரு சோதனை முயற்சி தான்.கொரோனா நோயாளிகளுக்கு மனஅழுத்தம் நீங்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது” என்றார்