புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஏப்., 2020

ஏப்ரலில் பிரித்தானியாவில் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம்: உதவிக்கரம் நீட்டும் ஜேர்மனி

பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது.

பிரித்தானிய வெண்டிலேட்டர் தயாரிப்பாளர்களால் போதுமான வெண்டிலேட்டர்களை சரியான நேரத்துக்குள் தயாரிக்க முடியாததால் பல்வேறு நாடுகளிலிருந்து வெண்டிலேட்டர்களைப் பெற பிரித்தானியா முயன்று வருகிறது.

ஜேர்மன் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 80 வெண்டிலேட்டர்களை கூடிய விரைவில் அனுப்ப இருப்பதை உறுதி செய்துள்ளார்.


பிரித்தானியாவுக்கு வெண்டிலேட்டர்கள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் அவற்றிற்கான பில் அனுப்பப்போவதில்லை என்றும் ஜேர்மனி தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் 10,000 வெண்டிலேட்டர்கள் இருந்தாலும், பிரித்தானிய சுகாதாரச் செயலர் Matt Hancock, அடுத்த பத்து நாட்களில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதனால் அதை சமாளிக்க தயாராக இருப்பதற்காக 18,000 வெண்டிலேட்டர்கள் தேவை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது