புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2021

சிறிலங்கா இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது-ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்

www.pungudutivuswiss.com
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்களிற்கும் கடல்வாழ் உயிரினங்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும் உலக நாடுகள் சிறிலங்காவுக்கு உதவவேண்டும் என சிறிலங்காவுக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா தொடரும் பெருந்தொற்றையும் தனது கரைகளில் உருவாககூடிய கடல்சார் பேரழிவையும் எதிர்நோக்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பலம் மற்றும் மீளஎழுச்சி பெறும் திறன் ஆகியவற்றை எதிர்பார்க்கும் அதேவேளை உலகில் உள்ள சிறிலங்காவின் சகாக்களை உடனடி உதவிகளை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட உபகரணங்கள் முதல்(தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்,ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவினை கையாள்வதற்கான சாதனங்கள் மற்றும் சுத்திரிகரிப்பதற்கான பொருட்கள்,) பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்களிற்கும் கடல்வாழ் உயிரினங்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும் உலக நாடுகள் உடனடி உதவிகளை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சூழலை பாதுகாப்பது இந்த சவாலை எதிர்கொள்ள உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad