புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2022

நாளை முழு அளவில் ஹர்த்தால் - விமான நிலையமும் முடங்கும்!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

    

சகல பகுதிகளிலும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்திற்கு 4 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதன் பின்னரும் பதவி விலகவில்லை எனில் 11 ஆம் திகதி முதல் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

நாளை நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தமது சேவைகளை நிறுத்தப் போவதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த சங்கம், அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் VIP மற்றும் CIP தரத்திலான செயல்பாடுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நிறுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை சேவையில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகி நாளைய ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad