புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2023

அரசிற்குள் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த தேசியவாதம்! - பேர்ள் அமைப்பு குற்றச்சாட்டு.

www.pungudutivuswiss.com



குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள்  தெரிவித்துள்ளது.

குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது

குருந்தூர் மலை ஆலயத்தில் பொங்கல் பொங்குவமை பௌத்தமதகுருமார் தலைமையில் சிங்கள கும்பலொன்று தடுக்க முயன்றமை அச்சுறுத்தியமை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை என்பதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொங்கலை தடுத்து நிறுத்துவதற்காக 11ம் திகதி பௌத்த மதகுரு ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ள போதிலும் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்துவதற்காக பௌத்த மதகுருமார் உட்பட 100 பேருக்கு மேல் குருந்தூர் மலையில் ஒன்று திரண்டார்கள் எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த நிகழ்வை குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ad

ad