யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட வேண்டும் என இந்தியத் தரப்பு திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அண்மையில் இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது கூட, நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று தான் கூறியிருக்கிறார். உண்மையில் நாங்கள் ஒருமித்து தான் இருக்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்கள் என்று இந்தியா சொல்கின்றது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் |