மேலும் நீண்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும், போரை நிறுத்துதல் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேறுதல் ஆகியவற்றை அடைவதே இதன் முக்கிய நோக்கம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கொண்டு முக்கிய விவரங்களை விவாதித்த மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா பகுதியின் நிர்வாகம் அரபு அல்லது இஸ்லாமிய ஆதரவுடன் செயல்படும் சுதந்திர அமைப்பிடம் ஒப்படைக்கும் பாலஸ்தீனிய தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. டிரம்பின் ஒப்பந்தத்தில் காசா பகுதி பரந்த தேசிய நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது |