-

4 அக்., 2025

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகும் விஜயின் சிசிடிவி காட்சிகள்

www.pungudutivuswiss.com
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தின் போது இடம்பெற்ற துயரசம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவற்றை கொடுக்க தவெக தலைவர் விஜய் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.


 துயரசம்பவம்

இதற்கான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்,ரோடு ஷோக்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்பு நேற்றையதினம்(3) விசாரணைக்கு வந்தது.

karur

அப்போது விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, நாமக்கல், கரூர் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும், குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பேருந்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் சம்பவத்தில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்பேரில் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்பிக்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியின் கட்டளைக்கு அடிபணிந்த விஜய்: விசாரணைக்கு தயாரான புலனாய்வு குழு!

நீதிபதியின் கட்டளைக்கு அடிப

ad

ad