-

4 அக்., 2025

வயிற்றுக்குள் உடைந்த கோகைன் பொட்டலம்: துபாயில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தும் நோக்கத்துடன் மான்செஸ்டர் விமான நிலையத்தில் டிசம்பர் 3ம் திகதி துபாய்க்கு வந்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக அவரது வயிற்றில் அடைக்கப்பட்டு இருந்த போதைப்பொருள் பொட்டலம் ஒன்று வெடித்து அவரது உடல் முழுவதும் போதை பரவியுள்ளது.

இதையடுத்து டிசம்பர் 4ம் திகதி துபாயில் உள்ள ஹோட்டல் அவலோனில் ஜென்சன் வெஸ்ட்ஹெட் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஜென்சன் வெஸ்ட்ஹெட் மரணம் தொடர்பில் நான்கு பேர் மீது லங்காஷயர் பொலிஸார் குற்றம் சாட்டினர்.

இதில் ஸ்டீவன் ஸ்டீஃபன்சன் என்ற 36 வயது நபர் மீது கோகைன் விநியோகம் தொடர்பான தனிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்படி, இந்த 4 பேரும் அக்டோபர் 31ம் திகதி மேல் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் லங்காஷயர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

ad

ad