-

4 அக்., 2025

ரணிலின் பொறிக்குள் அனுர அரசு! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற  பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின்  கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு இதுதொடர்பில் ஆலாேசனை வழங்கிய அரசாங்கமும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் அதனை செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்து. ஆனால் இந்த நடவடிக்கையில் தலையிட்டிருந்த நாணய நிதியம் தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருக்கிறது.

அதாவது 2028ஆகும்போது நாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் நாங்கள் 2028இல் பாரியதொரு தொகை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அதேநேரம் கடன் மறுசீரமைப்பு குறைகிறது. 2028இல் எங்களுக்கு கடன் மீள செலுத்த முடியாமல் போனால், எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. கடன் குறைப்பும் வட்டியும் கணக்கிடப்படுவது, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருட சராசரிக்கு அமைவாகும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க (டைம் பொம்) நேரம்பார்த்து வெடிக்கும் குண்டுகளை புதைத்து விட்டுச்சென்றுள்ளதாக நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.சில குண்டுகள் 2025 இறுப்பகுதியில் வெடிக்கும் வகையிலும் இன்னும் சில குண்டுகள் 2028இல் வெடிக்கும் வகையிலே புதைத்துள்ளார். இந்த டைம் பாம்களை எடுத்துக்கொண்டு விழுங்க வேண்டாம் என இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

அதுமாத்திரமல்ல, எங்களுக்கு கடன் செலுத்த முடியாமல் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகினாலும், வாக்குறுதியளித்த கடன் உரிமையாளர்களுக்கு கட்டாயமாக கடன் தவணைகளை செலுத்த வேண்டும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதனால் கடன் செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் எங்களுக்கு கடன் பெறவேண்டி ஏற்படுகிறது. அதற்காக மக்களின் சொத்துக்கள் வளங்களை விற்பனை செய்தாவது பணம் தேட வேண்டிவரும்.

அதனால் அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில், சர்வதேச நாணய நிதியம், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷவினர் இணைந்து பொறி ஒன்றை வைத்திருந்தனர். அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அழகான முறையில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்றார்.

ad

ad