| வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! [Wednesday 2026-07-01 18:00] |
![]() வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஜூன் 30) முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளைத் தொடர்ந்து, முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்ய அனுமதி கோரி இன்று (ஜூலை 01) பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர். இதனை ஆராய்ந்த வவுனியா நீதவான் நீதிமன்றம், வவுனியா மாநகரசபையின் முன்னாள் மேயர் சு. காண்டீபன் உட்பட நால்வரைக் கைது செய்து உடனடியாக நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். |
-
2 ஜூலை, 2026
www.pungudutivuswiss.com
