வெற்றிபெற்றமாவட்டஉறுப்பினர்களைக்கலந்துரையாட கொழும்பு வருமாறு அழைப்பு
கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைப்பது தொடர்பில் அரசாங்கமும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆராய்ந்து வரும் நிலையில், கட்சியின் வெற்றிபெற்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களை
-
10 செப்., 2012
மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி
என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூ. க்கு மக்கள் தகுந்த பாடம்: சந்திரகாந்தன
பிள்ளையானை வீழ்த்த நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
பிள்ளையானை வீழ்த்த நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பேசி முடி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
கிழக்கில் தலையாட்டி பொம்மையாக மாறுவதா? கூட்டமைப்புடன் இணைவதா? முஸ்லீம் காங்கிரஸ் நாளை முடிவு!
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐ. ம.சு. கூட்டமைப்புக்கு கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மையாக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கப் போகின்றதா? அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை அமைப்பதற்கான உரிமையை த. தே. கூட்டமைப்புடன் இணைந்து
9 செப்., 2012
தனது மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரைக் கைதுசெய்ய அதுருகிரிய காவல்துறையினர் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ஹினிதும பிரதேசத்தில் வசித்துவரும் இந்தச் சிறுமியை, மாலபே பிட்டுகல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வேன் ஒன்றில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தபோது அத்துருகிரிய காவல்துறையினர், வேனை முற்றுகையிட்டு சாரதியைக் கைதுசெய்துள்ளனர். அத்துடன், சிறுமியையும் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு: இலங்கை தமிழரசுக் கட்சி துரைரெட்ணம்-29,141 துரைராஜசிங்கம்-27,717 வெள்ளிமலை-20,200 பிரசன்னா-17,304 நடராசா-16,681 கருணாகரம்-16,536 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சந்திரகாந்தன்-22,338 அமீர் அலி-21,271 சிப்லி பாரூக்-20,407 சுபைர்-17,903 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நசீர் அஹமட்-11,401
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்றது, யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன் |
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார். அடுத்தகட்ட நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வலுவாக உள்ள தரப்பிடமும் தொடர்ந்து பேசி ஒரு முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. |
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகப் பூர்வ முடிவுகள் |
நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 இலட்சத்து 93 ஆயிரத்து 827 (30.59 %) வாக்குகள் பெற்று 11 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 இலட்சத்து 44 (31.58 %) வாக்குகள் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களுடன் 14 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 (20.98 %) வாக்குகள் பெற்று 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 74 ஆயிரத்து 901 (11.82 %) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும், தேசிய சுதந்திர முன்னணி 9 ஆயிரத்து 522 (1.5 %) வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியான வாக்குகள் விபரம் : மட்டக்களப்பு மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%) வாக்குகள் பெற்று 06 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 04 ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள் பெற்று 01 ஆசனத்தையும் சுயேட்சைக் குழு 8 : 5,355 (5.38%) வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி : 1026 (1.03%) வாக்குகளையும் பெற்று திருகோணமலை மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. அம்பாறை மாவட்டம் ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள் பெற்று 5 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும் இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)