ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.