-
7 செப்., 2014
அமெரிக்கன் பகிரங்க சுற்றுப் போட்டிகளில் அரை இறுதி ஆடங்களில் பெரிய தலைகள் வீழ்ச்சி
அரை இறுதி ஆட்டங்களில் முதல்தர ஆட்டக்காரர் ட்ஜோகொவிச் ஜாப்பானிய வீரர் நிஷிகொரியிடமும் மூன்றாம் தர வீரர் பெடரர் குரோசியா வீரர் சிலிசிடமும் தோல்வி கண்டு வெளியேறினார்கள் .இறுதியாட்டத்தில் பெரிதும் அறிந்திராத புதிய வீரர்களான செலிசும் நிசிகொரியும் மோதுகிறார்கள் . மகளிர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் செர்னா வில்லியம்சும் வோச்நியாக்கியும் மோதுகிறார்கள்
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது
மகளிர் இரட்டையர் ஆட்ட இறுதியாட்டத்தில் ஹிங்கிஸ்/ பெனிட்டா ஜோடி மகரோவ/ வேச்ணினா ஜோடியிடம் தோல்வி கண்டது
தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச் சராக பதவியேற்ற பிரபா கணேசன் தனது அமைச்சில் கடமை களைப் பொறுப்பேற்ற வேளை அவருக்கு இந்து வித்தியாகுரு பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி, தலைப்பாகை சூடி ஆசீர்வதித்தார். அமைச்சர் ரஞ்சித் சியம்ப லாபிட்டி, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரம சிங்கவும் அருகே காணப்படுகின்றனர்.
கூட்டமைப்பை சந்திக்கிறார் யசூசி அகாசி
24 ஆவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
திருச்சியில் இலங்கையர் கொலை : நால்வர் கைது
தமிழகத்தின் திருச்சியில் இடம்பெற்ற இலங்கையர் கொலை வழக்கில் தனிப்படை பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நெய்மருக்கு கிடைந்த அரிய வாய்ப்பு
வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள அணித்தலைவராக பிரேசில் கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையின் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
6 செப்., 2014
தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு மக்களை (BBC)வீடுகளை வெளியில் வர விடாமல் தடுப்பது என அறிவித்துள்ளனர்.
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)