புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


ஜெனிவாவில் இந்தியா குத்துக்கரணம்!
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி
நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் ; நீதியரசர்கள் சங்கம்
பிரதம நீதியரசருக்கு சிராணி பண்டாரநாயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ எடுக்கப் போவதில்லை என நீதியரசர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வ-யுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஜெனீவா மாநாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வ-யுறுத்தி ராஜபாளையத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

லண்டன் உலகத் தமிழர் மாநாடு : 
மு.க.ஸ்டாலின்,  டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, அருள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  பங்கேற்பு 

இங்கிலாந்து தமிழ் பேரவை மற்றும் தமிழர் ஆதரவு இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு இணைந்து லண்டனில் உலகத்தமிழர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை : உயர் நீதிமன்றம் தீர்ப்ப2013 ஆம் ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.
இலங்கை அகதி படுகொலைதமிழ்நாடு - கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான ஜெயபிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன


கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம் சோகத்தில் உறைந்த அல்லைப்பிட்டி



அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோட்டக் கிணறொன்றில் தவறுதலாக வீழ்ந்து மரணமடைந்துள்ளான். நேற்று மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. தேவாலய சபை ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சென்று திரும்பும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.2 ம் வட்டாரம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா(ரமணன்) அபிலாஷ்(யது) 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை
அகால மரணமடைந்தார்.

வடக்கில் காணாமல் போகும் முன்னாள் போராளிகள் - பின்னணியில் இராணுவம்
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீண்டும் காணாமல் போகும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள காடம்பாறை அட்டகட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியம்(வயது56). இவர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்ணம்மாள் என்பவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். கண்ணம்மாள் புகார் அளித்ததன் மூலம், என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் காமலீலைகள் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. என்ஜினீயர் சுப்பிரமணியம், காமிரா மூலம் பதிவு செய்த ஆபாச பட சி.டி.க்கள், லேப்-டாப் கருவியில் பதிவு செய்து இருந்த ஆபாச படங்களை

Yogeshwaran Velu
Friday
ஆனந்த விகடனின் உண்மை முகம் எது?

*********************************************
அன்பர்களே..அருளினியன் என்பவர் ஆனந்த விகடனில் எழுதிய 'விபச்சாரியாக மாறிய முன்னாள் போராளியின் கதையை' ஒரு நண்பர் சிறிது நேரத்துக்கு முன்புத
ான் எனது முகநூல் சுவரில் பதிவு செய்திருந்தார்.அவருக்கு முதலில் நன்றி.அந்த குறிப்பிட்டபெண்ணின் பேட்டியை முழுவதுமாகப் படித்தேன்.அதிலிருந்து நான் புரிந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து

கடனிலிருந்து மீள்வதற்காகவே நண்பனை படுகொலை செய்தேன்! நகை வர்த்தகர் கொலை குறித்து சந்தேகநபர் வாக்குமூலம்
மனைவியின் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன. பெருந்தொகையான கடன் இருந்தது. கடன் தொல்லையிலிருந்தும் பல பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்காகவே நண்பனான சின்னத்துரை இந்திரேஷ்வரன் என்பவரை கழுத்து நெரித்து படுகொலை செய்தேன்.

ஐ.நாவில் இந்தியா மௌனம்: மேற்குலகம் கண்டனம்: சர்வதேசத்தின் 210 பரிந்துரைகளில் 110ஐ ஏற்றுக்கொண்ட இலங்கை
ஜெனிவா- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இன்று இடமபெற்றிருந்த எனப்படும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் நிறைவடைந்தது
 புங்குடுதீவில் சகல வசதிகளையும் உள்ளடக்கக்கூடிய கட்டடங்களை கொண்ட மாவட்ட மருத்துவமனை ஒன்று உண்டு . ஆனாலும் அங்கு வாழும் மக்கள் வைத்திய சேவையை பெறுவதற்குரிய நிரந்த மருத்துவர் இல்லாமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும் . இவ் வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும்
வே . சு . கருணாகரன் ஆலோசகர் - சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் ) .

சகல பிரதேசங்களுக்கும் சுகாதார சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் கொழும்பு ,

ஸ்ரீ நிதியின் அசகாய திறமை


கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க குழந்தை ஸ்ரீ நிதியின் அசகாய திறமைகளை கண்டுகளியுங்கள்
பூகோள கால மீளாய்வு அமர்வில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுஅமர்வுகளில் இலங்கை தொடர்பில் 210 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
110 அகதிகளுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவில் இடைமறிப்பு
110 அகதிகளுடன் படகொன்று இன்று காலை கிறிஸ்மஸ் தீவு கடற்பிராந்தியத்தில் இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படையினரிடமிருந்து பொன்னாலை மக்களின் காணிகள், வீடுகள் 22 ஆண்டுகளின் பின்னர் இன்று கையளிப்பு
22ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை சிறிலங்காக் கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் கையளித்துள்ளனர்.

குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மீள சிந்திக்க வேண்டும்: மஹாநாயக்க தேரர்கள்
பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள சிந்திக்க வேண்டுமென இலங்கையின் மிக முக்கியமான பௌத்த மஹாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு செட்டித்தெருவில் அஞ்சலி! புதன்கிழமை இறுதிக் கிரியை!
நானுஓயா பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நகைத்தொழில் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பு செட்டியார் தெருவில் வைக்கப்பட்டிருந்தது.

கே.பியின் வலைக்குள் சர்வதேச இராஜதந்திரமா அல்லது சர்வதேச இராஜதந்திரத்தின் வலைக்குள் கே.பியா?
சர்வதேசத்தின் இராஜதந்திர வலைக்குள் சிக்கித் தவிக்கிறாரா கே.பி அல்லது தனது இராஜதந்திரச் செயல்பாடுகள் மூலமாகச் சிறந்த இராஜதந்திரியாகச் செயற்பட்டு தமிழீழத் தனியரசை உருவாக்க வழியமைக்கிறாரா கே.பி.என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் நிலவுகிறது.

செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்த பிரித்தானியா, இலங்கை அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.

ad

ad