புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014


கண்ணீருடன் காத்திருக்கிறேன் எனது தந்தை உயிரோடு வரவேண்டும் :மதுரை வாலிபரின் உருக்கம்
சென்னை போரூர் 11மாடி கட்டிட விபத்தில் சிக்கியிருக்கும் தந்தையை உயிருடன் மீட்டுத்தரக்கோரி மகன் நந்தகோபால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கண்ணீருடன் காத்திருக்கிறார்.


மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசு(வயது 45). இவர் சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் விபத்துக்குள்ளான கட்டிடத்தில் கொத்தனாராக வேலை செய்துவந்தார். இந்த நிலையில் கட்டிட இடிந்து விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அவருடைய மகன் நந்தகோபால் மற்றும் உறவினர்கள் போரூர் விரைந்தனர்.
அங்கு அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையின் தனது தந்தையின் புகைப்படம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவரிடம் அவர் அலைந்த காட்சி பரிதாபமாக இருந்தது.
தன் தந்தையின் நிலை குறித்து நந்தகோபால்,  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வேலை முடிந்ததும், சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை எனது அப்பா வீட்டுக்கு வந்துவிடுவார். வழக்கம்போலவே, கடந்த சனிக்கிழமையும் (விபத்து நடந்த அன்று) எங்களுக்கு போன் மூலம் அடுத்தநாள் வீட்டுக்கு வரவிருப்பதாக கூறினார்.
ஆனால் அன்றைய தினம் இரவு அவருடைய போன் ‘சுவிட்ச்–ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. உடனே உடன் வேலை பார்த்த அவருடைய நண்பர்களுக்கும் போன் செய்தோம். அனைவரது போன்களும் ‘சுவிட்ச்–ஆப்’ ஆகியிருந்தன. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
 
மறுநாள் செய்தித்தாள்களில் கட்டிடம் விபத்து குறித்து அறிந்து போரூர் வந்தோம். அங்கு காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரத்தை கேட்டறிந்தோம். அதில் எனது தந்தை பெயர் இல்லை.
தற்போது வரை எனது தந்தை குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் எனது குடும்பமே சோகத்தில் இருக்கிறது. எனது அப்பா எங்களுக்கு உயிரோடு கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் கடவுளை கண்ணீருடன் வேண்டிக்கொண்டும் காத்துக்கொண்டும் இருக்கிறேன். எனவே மீட்புக்குழுவினர் எனது தந்தையை உயிரோடு தரவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad