புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2020

கஞ்சா குகையாகின்றது யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம் கஞ்சா கடத்தலின் மையமாகியுள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 722 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 422 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட நிலையில் மண்டைதீவில் மீட்கப்பட்டதுனட 722 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


முன்னதாக மண்டைதீவுக் கடற்பகுதியில் கடற்படையினரும் மதுவரித் திணைக்களமும் இணைந்து நடாத்திய 300 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதோடு நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கரையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் கடலிலே கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது ஓர் படகில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றியதோடு படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

இதேநேரம் கரையில் காத்திருந்த மதுவரித் திணைக்களத்தினர் குறித்த கஞ்சாவினை கொள்வனவு செய்து எடுத்துச் செல்வதற்காக காத்திருந்த இருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

ad

ad