""புதுவை மாநிலத்தை திகில் மாநிலமாக ஆக்கிவருகிறார்கள் ரவுடிகள். அவர்களை அரசாங்கம் அடக்கிவைக்கவேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்து 27-ந் தேதி புதுவையில் முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினார்கள் வியாபாரிகள். இத
ற்கு அடுத்த இரண்டாம் நாளே, ஏனாம் சிறைக்குள் ரவுடிகள் நடத்திய அதிரடி கொலை nakeeranமுயற்சியைக் கண்டு புதுவை மாநிலமே அரண்டுபோயிருக்கிறது. என்ன நடந்தது?
ஆந்திர மாநில எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் புதுவை மாநிலப் பகுதிதான் ஏனாம். இங்கிருக்கும் கிளைச் சிறையில் புதுவையின் டேஞ்சரஸ் ரவுடிகளான மர்டர் மணிகண்டன், கருணா, மதுரைக்கார செண்பகக்குமரன் ஆகியோர் உள்ளிட்ட, பத்துக்கும் குறைவான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காவலுக்கு வார்டன்கள் உட்பட 7 பேர் அங்கு இருந்தனர்.
அடுத்த 5-வது நிமிடம் இன்னொரு வார்டன் வெளியே வந்தார். அப்போது பெட்ஷீட்டால் கட்டப்பட்ட வார்டன் தரையில் உருள, சுதாரித்துக்கொண்ட அந்த வார்டன், அலுவல கத்திற்குள் ஓடிப்போய்க் கதவை சாத்திக்கொண் டார். அங்கிருந்து ஏனாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் தகவல் கொடுக்க, அப்போது ஏனா மின் ஸ்பெஷல் பந்தோபஸ்த்துக் காக வந்திருந்த போலீஸ் டீம், அங்கே விரைந்தது. அதற்குள் 3 பேர் தப்பி ஓடிப்போக, மீத மிருந்த மணிபாலன், வெங்கடேசன், அமுதவன், திவாகர், பாக்யராஜ், விஜய குமார், வைத்தியநாதன் ஆகிய 7 ரவுடிகளையும் மடக்கினர்.
பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது சிறையிலிருக்கும்‘மதுரை ரவுடியான செண்பககுமரன், மர்டர் மணி கண்டனின் ஆதரவாளன். அவன் எங்கள் கருணாவை நாற் காலியால் அடித்துத் தாக்கினான். அதனால் மர்டர் மணிகண்ட னையும் செண்பககுமரனையும் மட்டையடிக்க (கொலை) கருணா எங்களை வரச் சொல்லியிருந்தார். காரியத்தை முடிக்கும் முன்பாக மாட்டிக்கொண்டோம்''’என பகீர் வாக்குமூலம் கொடுத்தனர்.
ஏனாம் காக்கிகளோ ""போன ஆண்டு ஏனாம் கலவரத்தின்போது கொல்லப்பட்ட சந்திரசேகருக்கு அன்று இரங்கல் ஊர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் பந்தோபஸ்த்துக்காக அன்று போலீஸ் டீமை வரவழைத் திருந்தோம். அவர்கள் வரவில்லை என் றால் நிலைமை மோசமாகியிருக்கும். சிறைக்குள்ளேயே தலைகள் உருண்டி ருக்கும்''’ என்கிறார்கள் பதட்டமாக.
ரவுடிகளை எதிர்த்து கடை யடைப்பு நடத்திய புதுவை வியாபார சங்கப் பிரமுகர்களிடம் நாம் விசாரித்தபோது ""புதுவை முழுக்க இப்ப ரவுடிகள் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்குது. குறிப்பா ரவுடிகளான வீரைய்யா, மர்டர் மணிகண்டன், கருணா இவனுங்க டீம்தான் மாநி லத்தையே கண்ட்ரோல்ல வச்சிக் கிட்டு அடாவடி பண்ணுது. வியா பாரிகள்ல இருந்து அரசியல்வாதிகள் வரை இவனுங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டியிருக்கு.
போன 24-ந் தேதி, பிரஞ்ச் கார்னர் பேக்கரியில் ரவுடி வீரய்யன் ஆட்களான மொந்தை சங்கர், சந்துரு, ரகு மூவரும் மாமூல் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டி, பகிரங்கமா அடாவடியில் இறங்கி னாங்க. இதைபார்த்துக் கொதிச் சிப் போய்தான் கடையடைப்புப் போராட்டத்தையே நடத்தினோம்.
இங்க நடக்கும் அநியாயத் தைக் கேட்டீங்கன்னா நொந்து போயிடுவீங்க. போத்தீஸ் துணிக்கடையில் வீரய்யன் டீம், மாசம் ஒரு லட்சம் மாமூல் வாங்குது. இதைப் பார்த்துட்டு மர்டர் மணிகண்டன் டீமும் மாமூல் கேட்டுது. தரமறுத்ததால் கடையில் வேலைபார்க்கும் பெண் ஊழியர்களை தூக்க ஆரம்பிச்சிட்டானுங்க. அப்புறம் பணத்தைக் கொடுத்துதான் அவங்களை மீட்டாங்க.
அதேபோல் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் சூப் கடை நடத்திவருகிறார் ஒரு பாய். சிறையில் உள்ள ஒரு ரவுடி, சூப் கடை உரிமையாளருக்கு போன்போட்டு, "ஒரு நாளைக்கு இவ்வளவு கிலோ மட்டன் வாங்குற,… ஆட்டு கால் இவ்வளவு வாங்குற, நாள் ஒன்றுக்கு இவ்வளவு வருமானம் வருது, அதில் சமீபத்தில் பிளாட் வாங்கி போட்ருக்க'ன்னு புள்ளி விபரங்களைச் சொல்லி, மாத மாமூல் கேட்டிருக்கான். இப்போ கருணாவுக்கும், மணிகண்டனுக்கும் அவரிடம் இருந்து மாமூல் போய்க்கிட்டிருக்கு. ஒரு கடை உரிமையாளருக்கு, சிறையில் இருந்து போன்போட்ட ஒரு ரவுடி, "மாமூல் கொடுக்க யோசிக்கிறியா? உன் பிள்ளை இந்த பள்ளியில் படிக்குது, உன் மனைவி இந்த ரூட்டில்தான் தினமும் போவுது. யோசித்து முடிவு செய்'னு மிரட்டலாக சொல்லியிருக்கான்.
அதேபோல் "சிறையில் கெடுபிடி நடத்துறீங்களா? ஜாக்கிரதை'ன்னு மர்டர் மணிகண்டன் டி.ஐ.ஜி. சுக்லாவையே போன மாசம் மிரட்டியிருக்கான். அவர் லாங் லீவில் போய்ட்டார். புதுவையில் இதே நிலை நீடிச்சா, வியாபாரி களான நாங்க எல்லோரும் மாநிலத்தையே காலிபண்ணிட்டு, எங்கயாவது போகவேண்டியதுதான்''’என்றார்கள் காட்டமாய்.
முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமோ, ""போலீஸ் 101 வழக்குகள் பற்றிய கோப்புகளை முதல்வருக்கு அனுப்பியிருக்கு. அதை அவர் க்ளியர் செய்யலை. அதனால் ரவுடிகள் மீது குண்டாஸ் போடமுடியாமல் போலீஸ் திணறுது. முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு முதல்வரா, அல்லது ரவுடிகளுக்கு முதல்வரா? என்று தெரியவில்லை''’என்கிறார் காட்டமாய்.
இது குறித்தெல்லாம் எஸ்.பி.ராமராஜிடம் கேட்டபோது ""62 ரவுடிகளுக்கு மாநிலத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று 144 தடை உத்திரவு போட்டிருக்கிறோம். இனி எங்கள் நடவடிக்கை கடுமையாக இருக்கும், மக்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு அரணாக இருப்போம்''’என்கிறார் அழுத்தமாய். ரவுடிகளின் பிடியில் இருந்து புதுவை விடுதலை பெறுமா?