புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013



           ரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை யை மத்திய அரசின் விலையோடு சேர்த்து 2,650 ரூபாயாக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளை கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.


ஒவ்வொரு வருடமும் அடுத்த வருடத்திற்கான கரும்பு பருவத்திற்கு ஆதாய மற்றும் நியாய விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அந்த விலையோடு மாநில அரசு தனது பரிந்துரை விலையை அறிவிக்கும். இந்த இரண்டு விலையும் சேர்ந்ததுதான் ஒரு டன் கரும்புக்கான விலை. அந்த வகையில் தனது அரசின் பரிந்துரை விலை யாக 550 ரூபாயை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இதனை எதிர்த்து, மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் தமிழக கரும்பு விவசாயிகள்.

கோத்தாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரனிடம் விலை நிர்ணயம் குறித்து கேட்டபோது,’""கடந்த 2011-2012க்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை 1450 ரூபாய். அப்போது ஜெயலலிதா அரசு தனது விலையாக 650 ரூபாயை அறிவித்து ஒரு டன் கரும்புக்கு  2,100 ரூபாயாக நிர்ணயித்தது. "நான் ஆட்சிக்கு வந்தால் 2,500 ரூபாயாக உயர்த்துவேன்' என்று வாக்குறுதி தந்தவர், ஆட்சிக்கு வந்ததும் மறந்து விட்டார். அடுத்து, 2012-2013க்கு மத்திய அரசு 1,700 ரூபாயை நிர்ண யிக்க, ஜெ. அரசோ கடந்த வருட விலையான  650 ரூபாயையே மீண்டும் நிர்ணயித்து ஒரு டன்னுக்கு 2,350 ரூபாயாக அறிவித்தது. 



மத்திய அரசு முந்தைய ஆண்டு விலையோடு 250 ரூபாயை அதிகப்படுத்திக் கொடுத்த நிலையில்  ஜெ. அரசோ ஒரு பைசாவைக் கூட உயர்த்தவில்லை. இந்தச் சூழலில்தான், மத்திய அரசு இந்த வருடத்திற்கு கரும்பின் விலையை டன்னுக்கு 2,100 ரூபாயாக அறிவிக்க, மாநில அரசோ 550 ரூபாய் மட்டும் உயர்த்தி டன்னுக்கு 2,650 என சொல்லியுள்ளது. இங்குதான் பிரச்சினையே. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 400 ரூபாய் உயர்த்தி விலையை அறி விக்கிறது மத்திய அரசு. அதேபோல ஜெயலலிதா அரசும் முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு விலை யை அதிகரித்து அறிவித்திருக்க வேண்டும். அதைச் செய்ய தவறியதுமில்லாமல்... கடந்த வருடம் நிர்ண யித்த 650 ரூபாயிலிருந்து 100 ரூபாயை குறைத்து விட்டார். கரும்பு உற்பத்திக்கான அனைத்துச் செலவு களும் தாறுமாறாக உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் ஜெ. அரசின் விலை நிர்ணயத்தை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலனை முன்னிறுத்தியே இந்த 100 ரூபாயை குறைத்திருக்கிறார்கள். கரும்பு விவசாயிகளை இந்த அரசு தொ டர்ந்து வஞ்சித்து வருகிறது'' என் கிறார் கோபமாக. இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் விருத்தகிரி, ""டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்தால்தான் கரும்பு விவசாயிகள் ஓரளவாவது நிம்மதி பெருமூச்சு விடமுடியும்ங்கிற சூழலில், 2,650 ரூபாய்தான் என்று சொல்வது விவசாயிகளை வாழ வைக்காது. 

இவர்களை ஓட்டுப்போட்டு ஆட்சி யில் அமர வைத்தது கரும்பு விவசாயிகளா? தனியார் ஆலை முதலாளிகளா? என்று ஆட்சியாளர்கள் யோசிப்பது நல்லது'' என்று ஆவேசப்பட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ""தமிழகத்திலும் உத்தரபிரதேசத்திலும் கரும்பின் பிழிதிறன் 9.2 சதவீதம். இந்த சதவீதம் இருக்கும் கரும்பு டன்னுக்கு உ.பி. அரசு 2,850 ரூபாய் நிர்ணயித் திருக்கிறது. அங்குள்ள விவசாயிகள் 3,350 ரூபாய் வேண்டுமென தொடர் போராட்டத்தில் இறங்கிய தால் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்த முதல்வர் அகிலேஷ், தனது அரசு நிதியிலிருந்து டன்னுக்கு 500 ரூபாயை போனஸாக அறிவித்து வழங்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு டன்னுக்கு 3,350 கிடைத்து வருகிறது. இதேபோல தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று, மத்திய அரசு தனது ஆதாய விலையை அறிவித்த ஜூலை மாதத்திலிருந்து கடந்த 4 மாதமாக பலமுறை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், செவி கொடுத்துக்கூட கேட்காமல் கரும்பு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது அரசு. எங்களை இந்த அரசு கன்சிடர் பண்ணாமல் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கன்சிடர் பண்ணவேண்டி வரும்''’என்று குமுறுகின் றார் விருத்தகிரி.


இதே ஆதங்கத்தை எதிரொலிக்கும் ஒட்டு மொத்த கரும்பு விவசாயிகளின் சங்கத்தினரும், ""கரும்புக்கான விலையை நிர்ணயிக்கும் முன்பு கரும்பு விவசாயிகள், தனியார் ஆலைஅதிபர்கள், அரசு அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒருமுறை கூட நடக்கவில்லை. ஆனால் தென்னிந்திய தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் சங்கத்தினரை மட்டும் அழைத்து ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டனர் 15 நிமிடம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விலை யை முடிவு செய் துள்ளார்கள்''’ என்கிறார்கள்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்திலுள்ள வேளாண்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""கரும்புக்கான விலை நிர்ணயம் தொடர்பாக வேளாண் அமைச்சர் தாமோதரனை எதிலுமே சம்பந்தப்படுத்தாமல் தொழில்துறை அமைச்சர் தங்கமணியும் உயரதிகாரிகளுமே எல்லாம் பார்த்துக்கொண்டனர். தற்போது தமிழகத்தின் கரும்பு உற்பத்தி 1 கோடியே 50 லட்சம் டன். 

இதில் 70 சதவீதம் தனியார் ஆலைகளுக்குத் தான் செல்கிறது. அந்த வகையில் இந்த வருடம் கரும்புக்கான கொள்முதல் விலையில் 100 ரூபாய் குறைத்திருப்பதால் 150 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு. அந்த 150 கோடியில் 70 சதவீதம் தனியாருக்கு என்பதால் அவர்களுக்கான லாபம் மட்டும் சுமார் 110 கோடி ரூபாய். இந்த லாபத்தில் பெரும் பகுதி "யூ டர்ன்' அடித்துப் போகவேண்டியவர்களுக்குப் போகலாம்'' என்கிறார்கள் இயல்பாக. 

ad

ad