புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013



               ட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பதும், கட்சியே ஒதுக்கி வைப்பதும் மு.க. அழகிரிக்கு புதிதல்ல. கடந்த மார்ச் 25-ஆம் தேதி நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காத அழகிரி, கடந்த 15-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கும் வரவில்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 5 இடங்களில் நடந்த சிறை நிரப்பும்
போராட் டங்களிலும்  கலந்து கொள்ளவில்லை. தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருக்கும் அழகிரியின் இந்தத் தொடர் புறக்கணிப்பின் காரணமாகவோ என்னவோ, மதுரை மாநகர் மாவட்ட 4-ம் பகுதி தி.மு.க. சார்பாக ஆரப்பாளையத்தில் நடந்த பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்ட அழைப்பிதழில் அழகிரி எம்.பி.யின் பெயர் இல்லை. அந்த மேடையில் பேசிய யாருமே அழகிரியின் பெயரை உச்சரிக்கவும் இல்லை. 

அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணித்த இந்தப் பொதுக்கூட்டத்தில்,  மென்மையாக பேசுபவரான தயாநிதி மாறன் மட்டும், அழகிரியின் சாதனைகளை பட்டியலிட்டு,  “"அஞ்சா நெஞ்சன்...'’என்று சற்று கத்தி உணர்ச்சிவசப்பட்டார். அழகிரியை மையம் கொண்டு,  மதுரை தி.மு.க.வில் எதுவும்  எப்போதும் நடக்கும் என்பதை உ.பி.க்கள் அறியாதவர்கள் அல்ல.  அது சரி... மேடை ஏறுவதற்கு முன் அழகிரியை தயாநிதி சந்தித்ததால் வந்த மாற்றம்தானே இது? அந்தச் சந்திப்பில் அப்படி என்னதான் நடந்தது?  



கட்சித் தலைமையின் சம்மதத்தோடு, அழகிரியைச் சந்தித்து சமாதானப்படுத்த வேண்டும் என்ற  திட்டத் தோடு, சென்னையிலிருந்து கிளம்பிய தயாநிதியை, மதுரை விமான நிலையத்தில் வரவேற்க அழகிரியின் ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. சங்கம் ஓட்டலில் தயாநிதிக்கு சால்வை அணிவிக்க வந்திருந்த தி.மு.க. பிர முகர்கள் மத்தியிலும் அழகிரியின் ஆதரவாளர் ஒரு வரைக்கூட பார்க்க முடியவில்லை. மாமா அழகிரியின் கோபத்தைத் தணிக்கும்விதமாக தயாநிதி போனில் நலம் விசாரித்தபோது "“கூட்டத்துக்கு நீங்க வரணும்...'’என்று அழைப்பு விடுத்திருக் கிறார். அழகிரியோ, ""நோட்டீஸ்ல என் பேரைப் போடல. படத்த மட்டும் போட்டிருக் காங்க. முரசொலியிலும் என் பேரை போடல. நான் இந்தத் தொகுதி எம்.பி. அப்படியிருந்தும் பேரை போடல...’''’என்று குமுறியவர், தன் வீட்டுக்கு சாப்பிட தயாநிதியை அழைத்திருக் கிறார். ஏற்கனவே மா.செ.தளபதியும், பகுதி செயலாளர் ஜெயராமனும் மதியச் சாப்பாட் டுக்கு சந்திரன் மெஸ்ஸில் ஏற்பாடு செய்து விட்ட நிலையில்,  கட்சியா? மாமாவா?’ என உள்ளுக்குள் கேள்வி எழுந்து, ‘யார் பகையும் வேண்டாம்’என்று முடிவும் எடுத்து, "இல்ல மாமா... எனக்கு குமார் மெஸ் சாப்பாடுன்னா ரொம்பப் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியும்ல.. அதான் எங்க மேனேஜர் முருகன் மொதல்ல யே ஆர்டர் கொடுத்துட்டாரு. மதியச் சாப்பாட்ட குமார் மெஸ்ஸுல முடிச்சிட்டு, ஈவ்னிங் டிபன் பண்ணுறதுக்கு வீட்டுக்கு வர்றேன்'’ என்றிருக்கிறார். 

சொன்னபடியே 4-45 மணிக்கு சங்கம் ஓட்டலில் இருந்து  தயாநிதி கிளம்ப, அழகிரி வீட்டு முன்பாக பத்திரிகையாளர்கள் கூடி விட்டனர். அதுவரை திறந்து வைத்திருந்த அழகிரி வீட்டின் முன் கதவை, தயாநிதி வரும் நேரம் பார்த்து சாத்திவிட்டார்கள்.  தயாநிதி யும் வந்து விட்டார். முன்வாசல் வழியாகச் செல்ல எத்தனித்தும் கதவுகள் ஏனோ’ திறக்கப்படாததால்,  கொல்லைப் பக்கம் வழியாக தயா நிதி செல்ல வேண்டியதாயிற்று. இயல்பான சிரிப்புடன் வீட்டுக்குள் சென்ற தயாநிதி ஒன்றரை மணி நேரம் கழித்து, லுங்கி, சட்டை அணிந்திருந்த அழகிரியுடன் வெளியே வந்தார். கொஞ்சம் இறுக்கமாகக் காணப்பட்ட அவர், பத்திரிகையாளர்களின் கேமராவுக்காக  செயற்கையாகச் சிரித்து வைத்தார்.  

கேசரி, டிபன், காபி என தயாநிதிக்கு உபசரிப்பு இனிப்பாக நடந்தாலும்,  காரமே தூக்கலாக இருந்திருக்கிறது அழகிரியின் பேச்சில். ""இங்கே எதுவும் ஒழுங்கா நடக்கல. மத்திய அமைச்சர் பதவிய ராஜினாமா பண்ணச் சொல்லுறதுக்கு முன்னால என்கிட்ட ஏன் கேட் கல? கனிமொழிக்காக கட்சி நடத்தினால் எப்படி? அடுத்து மதுரைல எம்.பி.க்கு நிற்கச் சொல்லு வீங்க.. பத்துநாள் கழிச்சு ராஜினாமா பண்ணச் சொல்லுவீங்க. இதெல்லாம் சரிப்படாது. இப்ப வும் பொதுக்குழுவுல, எந்த அடிப்படைல கூட்டணி இல்லைன்னு அறிவிச்சீங்க? காங்கிரஸ் இல் லைன்னா விஜயகாந்த் வரமாட்டாரு. விஜயகாந்த்கிட்ட பேச்சுவார்த்தை எதுவும் நடத்துன மாதிரி தெரியல. மொத்தத்துல இந்த எம்.பி. தேர்தல்ல நான் நிற்கமாட்டேன். அதான்... எந்திரிச்சு நடந்துருவேன்னு தலைவர் சொல்லிட் டாருல்ல. அவரை டம்மியாக்கிட்டு யாரும் கட்சிப் பொறுப்புக்கு வர முடியாது. திருமா வளவன் நம்ம கூட்டணியில இருந்தாலும், பெரும்பாலான தலித் ஓட்டு காங்கிரஸ் கூட் டணிக்குத்தான் போகும். தலித்துக்கள் எப்பவும்  காங்கிரஸ் ஆதரவு நிலைதான் எடுப்பாங்க. அப்ப காங்கிரஸை உடைங்க... வாசனை நம்ம பக்கம் கொண்டு வாங்க. 

எழுத படிக்கத் தெரியாத.., கையெழுத்துகூட போடத்தெரியாத தாவூத் மா.செ.வா இருந் தப்ப மதுரைல கட்சிக்கு ஆபீஸ் கட்டினாரு.. அந்த கட்சி ஆபீஸுக்கு 34,000 ரூபாய் கார்ப்பரேஷன் வரி பாக்கி இருக்குன்னு நோட்டீஸ் வந்திருக்கு. மா.செ. தளபதி வச் சிருக்கிற கார் விலை என்னன்னு தெரியுமா? 94 லட்ச ரூபாய். அவரோட அப்பா திருப் பரங்குன்றம் கோயில் வாசல்ல சுண்டல் கடை வச்சிருந்தாரு. கட்சியால இம்புட்டு வசதி தளபதிக்கு வந்திருக்கு. ஆனா, கட்சி ஆபீஸுக்கு வரி கட்ட முடியல. இப்படிப் பட்ட ஆளு மா.செ.வா இருந்தா மதுரைல கட்சி எப்படி வளரும்? தலைவரு மனசு நோகக்கூடாதுன்னுதான்  நான் எந்தக் கூட் டத்துக்கும் வர்றது இல்ல. வாயை திறக்குற தும் இல்ல''’என்று சீறலாகப் பேசியிருக் கிறார். ஆனாலும், தயாநிதி மூலம் நடத்திய சமாதானத்தை ஏற்றுக்கொண்டோ என்னவோ  சென்னையில் கால் பதித்திருக்கிறார் அழகிரி.     

ad

ad