புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013

பூநகரி வலைப்பாட்டில் இராணுவம் வெறியாட்டம்! இந்தியப்பிரஜை கைது, சிறீதரன் எம்பி உள்ளிட்ட மூவர் 6 மணித்தியாலங்களாக தடுக்கப்பட்டு விடுவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கென
சென்றவேளையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 11.00 மணியளவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, அப்பகுதி மக்கள் தற்சமயம் தாம் எதிர்நோக்குகின்ற பொன்னாவெளிப் பிரதேசத்தின் மீதான ஒருவருடத்தையும் தாண்டி தொடரும் சந்தேகத்தை உண்டுபண்ணும் ஆய்வு, மக்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் சீர்படுத்தப்படாமை, மாணவர்களின் கற்றல் நடவடிக்கையில் ஏற்படும் இடர்கள் தொடர்பாக மக்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து வலைப்பாடு புனித அந்தோனியார் ஆலயத்துக்கு சென்று பங்குத்தந்தையுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த சமயம் 50ற்கு மேற்பட்ட இராணுவத்தினரால் 1.30மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உடனடியாக இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினதும் வட மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப்பிரதேசசபை உறுப்பினர் கௌரவ.சு.தயாபரன் ஆகியோரின் புகைப்படக் கருவிகள் இராணுவத்தால் காட்டுமிராண்டித்தனமாக பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இராணுவத்தின் கட்டளையின் பிரகாரம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 6 மணித்தியாலங்களுக்குப் பின்னரே உறுப்பினர்களின் புகைப்படகருவிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவர்களிடம் வழங்கப்பட்டன.
எனினும் இந்தியப் பிரஜை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுளார். நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என ஜெயபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
$
$

ad

ad