சிலர் அதற்காகவே இணையதளத்திற்கு வருகிறார்கள். இந்த நாடு அந்த நாடு என்ற பேதமில்லாமல் உலகம் முழுவதும் இந்தப் பழக்கம் இருக்கிறது. அவர்களின் விருப்பம் சிறுவர்-சிறுமியர்தான். வெப்கேமரா மூலமாக அவர்கள் நடத்தும் இணைய உரையாடல்கள் அதிர்ச்சிதரக்கூடியவை. பேச்சுகளும் காட்சிகளுமாக ஒரு பாலியல் வன்முறையை
அவர்கள் நடத்திக்கொண்டிருப்பார்கள். இதற்குப் பலியாகிற சிறுவர்-சிறுமிகள் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். வெப்கேமரா டூரிஸம் என்ற பெயரில் இது பரவிக்கொண்டிருக்கிறது.
இந்த இணைய காமுகர்கள் அத்தகைய சிறுவர்-சிறுமிகளுடன் ச்சாட்டிங் எனப்படும் உரையாடலை மெதுவாக ஆரம்பிப்பார் கள். குறிப்பாக, 10, 12 வயதில் உள்ள சிறுமிகள். "ஹாய்... டியர்... ஹனி' எனத் தொடங்கி கொச்சையான- பச்சையான வார்த்தைகள் தொடரும். அதற்கு சிறுமிகளிடமிருந்து பதில்கள் வரத்தொடங்கினால், வெப்கேமரா துணையுடன் முகத்தையும் உடலையும் காட்டச் சொல்வார்கள். அதில் பரவசமடை வார்கள்.
சிறுவர்-சிறுமிகளைக் கொண்டு இப்படி நடத்தப்படும் வீடியோ பாலியல் பதிவுகள் ல்ங்க்ர்ல்ட்ண்ப்ங்ள் என்ற பெயரில் இணையதளத்தில் நிறைந்து கிடக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வீட்டி என்ற 10 வயது சிறுமியும் இப்படித்தான் இணையதளத்தில் சிக்கிக்கொண்டார். தினமும் அவர் ஆன்லைனுக்கு வரும்போது சில விநாடி களிலேயே 10, 50, 100 என எதிர்முனையில் ஆட்கள் கூடிவிடுவார்கள். உரையாடல் நடந்துகொண்டே இருக்கும். வெப்கேமரா வில் அவரது அழகை ரசிப்பதுடன், தங்கள் விருப்பங்களையெல்லாம் தெரிவிப்பார்கள். எல்லாவற்றுக்கும் ஸ்வீட்டி சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர்கள் சொல்வதுபோல செய்துகாட்டுவார். அதனால் ஸ்வீட்டிக்கு ஏராளமான வருகை யாளர்கள் தினந்தோறும் வந்தபடி இருந்தனர்.
அன்னியோன்யமாகப் பழகிய அவர்களி டம் ஸ்வீட்டியும் கேள்விகள் கேட்க ஆரம் பித்தார். அவர்களின் பெயர், முகவரி, இ-மெயில் முகவரி, ஃபேஸ்புக்-ட்விட்டர் கணக்குகள், அவற்றின் பாஸ்வேர்டு என்றெல்லாம் ஸ்வீட்டி கேட்கக் கேட்க அந்த சிறுமி மீது ஏற்பட்ட மயக்கத்தால் அவர்களும் தங்கள் உடலைப் போலவே எதையும் மறைக்காமல் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்குமே தெரியாது. ஸ்வீட்டி பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் அல்ல என்பதும் ஸ்வீட்டி என்றொரு சிறுமியே கிடையாது என்பதும் அவர் களில் யாருக்கும் தெரியாது. ஆம்.. ஸ்வீட்டி என்பவர் உண்மையான சிறுமி அல்ல. கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு தோற்றம் (graphics image).
அச்சு அசலாக சிறுமி போலவே வடிவமைக்கப்பட்ட அந்தத் தோற்றத்தினை உண்மை என நம்பி தங்கள் இச்சையை வெளிப் படுத்திய அனைவரும் அந்த மயக்கத்தில் தங்கள் பெயர், முகவரி, இ-மெயில், பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களைக் கொட்டிவிட்டனர். தற்போது சுமார் 1000 பேருடைய விவரங் கள் சர்வதேச போலீசாரான இன்டர்போல் வசம் உள்ளது. ஸ்வீட்டி என்ற தோற்றத்தை உரு வாக்கி இத்தனை பேரை சிக்கவைத் தது நெதர்லாந்து நாட்டுத் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள டெரி டெஸ் ஹோமீஸ் (பங்ழ்ழ்ங் க்ங்ள் ட்ர்ம்ங்ள்) என்ற அமைப்பு.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஹன்ஸ் குஜ்ட் இது பற்றி விளக்கமாகவே சொல்கிறார். ""பணக்கார நாட்டுக்காரர்கள், ஏழை நாடுகளில் உள்ள சிறுமிகளைக் குறிவைத்து இந்த வேலையைச் செய்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பது பற்றி புரிந்துகொள்ளக்கூடிய வயது இல்லாத சிறுமிகள் இதில் சிக்கிக்கொள்கிறார்கள். 6வயது சிறுமிகள்கூட இதற்குப் பலியாகியிருக்கிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்கள் குறைவு. தண்டிக்கப்பட்டவர் களும் குறைவானவர்கள்தான். இதற்கு ஒரே வழி, இத்தகைய வெப்சைட்டுகளைக் கண்டறிந்து, அதன்மூலம் இதில் ஈடுபடுபவர்களைக் கண்டறிவதுதான். அதைத்தான் நாங்கள் செய்தோம். இதற்காக ஒரு கம்ப்யூட்டர் இமேஜை உருவாக்கினோம். சரியான மாடல்கள் மூலம் கண், உதடு, முகம் ஆகியவற்றை உருவாக்கி, காமுகர்களை அதை நிஜம் என நம்பவைத்தோம். அதில்தான் 1000 பேர் சிக்கியுள்ளனர். எங்களின் தனிப்பட்ட முயற்சியிலேயே இத்தனை பேர் சிக்கி யிருக்கிறார்கள் என்றால், உலகளவில் இதனைத் தடுப்பதற்கான நெட்வொர்க்கை உருவாக்கினால் லட்சக்கணக்கான பேரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்'' என்கிறார் ஹன்ஸ்.
ஐ.நா.வின் கவனத்திற்கும் இதனை டெரி டெஸ் ஹோமீஸ் அமைப்பு கொண்டு சென்றுள்ளது. ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி (குழந்தைகள் மீதான வன்முறை) மார்டா சாண்டோஸ் பைஸ், ""இது உடனடியாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. சர்வதேச அளவில் கடுமையான சட்டத்தையும் தண்டனையையும் உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்கிறார். யூ-டியூப்பிலும் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=aGmKmVvCzkw .
ஸ்வீட்டியுடன் உரையாடி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தி, இன்டர்போல் போலீசாரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டி யலில் 106 பேர் இந்தியர்கள். அதாவது 10 சத வீதத்தினர். இவர்களால் இந்தியாவில், தமிழகத் தில் உள்ள குழந்தைகளுக்கும் வலைவீசப் பட்டிருக்குமே என்ற கவலையுடன் குழந்தை கள் உரிமைக்காக பாடுபடும் தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயனைச் சந்தித்தோம்.
""இந்தியாவில் 53% குழந்தைகள் பாலியல் தீங்குக்கு உள்ளாகி யிருப்பதை மத்திய அரசின் ஆய்வு 2007-லேயே சுட்டிக்காட்டியிருக் கிறது. பெண் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து தன் பக்கம் ஈர்த்து, தொட்டுத் தடவி தீங்கு விளைவிப்போர் பற்றிய எச்சரிக்கைகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன் இன்னொரு வடிவம்தான் இந்த இணையதளக் கொடுமை. இதனைத் தவிர்க்கவேண்டுமென்றால் பல தளங்களிலும் விழிப்புணர்வு தேவை. கல்வி மூலமாக விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். காமத்தைக் கட்டுப்படுத்துவதைவிட அதனை நெறிப்படுத்துவது பற்றிக் கற்றுத்தரவேண்டும். குழந்தைகளுக்குத் தங்களின் உடலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடுதல், பாலியல் தூண்டுதல் ஆகியவை பற்றி எச்சரிக்கை உணர்வுடன் கற்றுத்தரவேண்டும்.
அதனையடுத்து, சட்டங் களைக் கடுமையாக்க வேண்டும். இங்கே பல சட்டங்கள் பலவீனமாக உள்ளன. 2012-ல் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் தீங்கிழைத்தலுக்கு எதிரான சட்டம் இருப்பதிலேயே வலி மையான சட்டம் அதைப் பற்றி காவல்துறையினருக்கே சரிவரத் தெரியவில்லை. அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவ துடன், இணையதள செயல்பாடு கள் தொடர்பான சட்டங்களை யும் கடுமையாக்கவேண்டும். குழந் தைகளுக்கான ஆணையங்கள் இருக்கின் றன. ஆனால் அவற்றிற்கிடையிலான ஒருங்கிணைப்பு குறைவாக இருக்கிறது. அதனை மேம்படுத்தவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, குழந் தைகளிடம் பெற்றோர் நேரம் செல வழிக்கவேண்டும். அவர்களின் படிப்பைப் பற்றிக் கேட்பதுடன் அவர்களின் நண்பர்கள், பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் ஒரு தோழனாக-தோழியாகப் பெற்றோர் கேட்டறிய வேண்டும். நல்ல விஷயங்களைப் பாராட்டவேண்டும். பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் பாராட்டு கிடைக்காத குழந்தைகள் தன்னை ஸ்வீட்டி என்றும் க்யூட்டி என்றும் ப்யூட்டி என்றும் பாராட்டும் வெளிநபர்களிடம் மயங்கிவிடுகின்றன. அவர்கள் அதனை வாய்ப்பாக்கிக்கொண்டு தீங்கிழைக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இத்தகைய தீங்குகளைக் கட்டுப்படுத்தலாம்'' என்றார் விரிவாக.
சிறுமிகளைக் குறிவைத்து நம் வீட்டு அறைக்குள்ளும் இணையதளம் வழியாக நுழைவதற்கு காமுகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டியது நம் கடமை.