புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013

ஜெயலலிதா மீது சீறும் தி மு க காரர்

சென்னை தி.நகரில் கலைஞர் :


நான் திருவாரூரில், "ஓடிவந்த ’இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழையுள்ள நாடுஇதுவல்ல' என்று முழங்கி, கையிலே வில், புலி, கயல் பொறித்த தமிழ்க்கொடியைப் பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே  ஈடுபட்ட காலத்தில், இந்த அம்மையார் பிறக்கக் கூட இல்லை. அவர் என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிற அளவிற்கு அவருக்கு தைரியம் வந்திருக்கிறது. ஒரு ஆட்சி விட்டுப்போகிற பணிகளை, அடுத்து வருகின்ற ஆட்சி அந்தப் பணிகளையெல்லாம் தொடர் பணிகளாக ஆக்கி, மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமே அல்லாமல், தன்னுடைய ஆட்சியில் அதை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், அவர்களைப் போன்ற தீய சக்தி இருக்க முடியாது. அந்த தீயசக்திகளின் பட்டியலில் தன்னை
இணைத்துக் கொண்டிருக்கிற ஜெயலலிதா என்னைப் பார்த்து தீயசக்தி என்கிறார். அந்த தீய சக்திக்கு நீங்கள் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாமா?.

செங்கல்பட்டில் மு.க.ஸ்டாலின் :


பெங்களூரு வழக்கிலே ஜெயலலிதாவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் "இப்போதுள்ள அரசு வழக்கறிஞர் வேண்டாம், ஓய்வு பெற்ற நீதிபதியே விசாரிக்க வேண்டும்' என்கிறார். ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? கவர்னரை முதல்வர் பார்க்கச் சென்றால் அமைச்சர்கள் அலறுகிறார்கள். காரணம் அமைச்சர்களை அடிக்கடி மாற்றுகிறார். அதற்கான காரணத்தைச் சொல்ல மறுக்கிறார். அவர்கள் ஊழல் செய்தார்களா? நிர்வாகம் செய்யவில்லையா? தெரிய வில்லை. அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற இன்றுவரை தமிழ்நாட்டில் 3,231 கொலைகளும் 1170 கொள்ளைச் சம்பவங்களும் நடந்திருக்கிறது. இதுதான் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிற லட்சணமா? இந்த டூப்ளிகேட் ஆட்சியைத் தூக்கியெறிய, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் நாம் வெற்றிபெற பாடுபட வேண்டும்.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு :


மைனாரிட்டி தி.மு.க. அரசை 5 ஆண்டுகாலம் ஆதரிச்சோம்ன்னு காங்கிரஸ்காரங்க சொல்றாங்க. நான் சொல்றேன் 10 ஆண்டுகாலம் மைனாரிட்டி அரசா இருந்த மத்திய காங்கிரஸ் அரசை, தி.மு.க.தான் பலமாக ஆதரித்தது. நாங்களாக காங்கிரஸைத் தேடிச் சென்றதில்லை. அவர்கள்தான் தேடி வருவார்கள். 71-ல் சிண்டிகேட்டா இண்டிகேட்டா என்று வந்தபோது, கலைஞரிடம் இந்திரா 10 சீட்டை வாங்கி, அவர் ஆதர வில் அமோகமா ஜெயிச்சார். 76-ல் அதே காங்கிரஸ் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து, கழகத்தினரைக் கைது செய்தது. இதன் பிறகு 80-ல் இந்திரா, கலைஞரிடம் கேட்டுக்கொண்டதால் மீண்டும் கூட்டணி உருவானது. அதன் பிறகு அமோக வெற்றி பெற்ற இந்திரா, மூன்று மாதத்தில் தி.மு.க. வை கழற்றிவிட்டார். ராஜீவ் மறைவிற்குப் பிறகு நரசிம்மராவ் பிரதமரானார். அப்போது சோனியாவை, காங் கிரஸின் தலைவராக அவர்கள் யாரும் உட்காரவிடவில்லை. நரசிம்மராவ் மறைவிற்குப் பின் தி.மு.க.வுடன் சோனியா கூட்டணிவைத்த பிறகுதான் சோனியாவால் கட்சித் தலைவரா ஆகமுடிந்தது. மன்மோகன்சிங் பிரதமராகவும் உதவியவர் கலைஞர்தான். ஒவ்வொரு முறையும் நேரு குடும்பத்துக்கு உதவியவர் எங்கள் கலைஞர். ஆனால் எங்கள் முதுகில் குத்திக்கொண்டே இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள்.

கடலூரில் ஆ.ராசா :


நான் 2ஜி மூலம் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்தது. சி.பி.ஐ. ஒரே நேரத்தில் 32 இடத்தில் ரெய்டு செய்தது. என் குடும்பத்தாரையும் என்னோடு பழகிய நண்பர்கள் வீடுகளையும் வாட்டி வதைத்து எடுத்தார்கள் . நான் நீதிமன்றத்திலே சொன்னேன் என் மண்டை ஓடிலிருந்து ஒரு முடியைக்கூட எடுக்க முடியாது என்று. நான் சொன்னதுபோல் கடந்த 14-ந் தேதி இந்த கேசு விசாரணை அதிகாரி விவேக்பிரியத்தரசி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார், "அலசி ஆராய்ந்து பார்த்தோம் ஒண்ணும் இல்லை' என்று.நான் செய்தது என்ன? செல்போன் கட்டணம் நிமிடத்துக்கு ஒரு ரூபாயாக இருந்ததை 30 பைசாவாக கொண்டு வந்தேன், 30 கோடி பேர் பயன்படுத்திய செல்போன் 90 கோடி பேர் பயன்படுத்தும் வகையில் கொண்டு வந்தேன். சராசரி 315 ரூபாய் கட்டணத்தை 100 ரூபாயாககொண்டுவந்தேன், சாமான்யனும் பயன்படுத்தும் வகையில். இது குற்றமா?

புதுக்கோட்டையில் டி.ஆர்.பாலு :


இங்கே கோமாரி நோயைக் கொண்டுவந்தது யார் தெரியுமா? இதே ஜெயலலிதாதான். விலையில்லா மாடுகளை தமிழக மக்களுக்குக் கொடுக்கப்போகிறேன் என்று ஆந்திராவில் போய் மாடுகளைக் கேட்டார் ஜெ. அவர்களோ விலையில்லா மாடுகள்தானே வேண்டும்? என்றபடி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை சப்ளை பண்ணி விட்டார்கள். நம் பகுதியிலேயே இல்லாத கோமாரி நோய், இப்படித்தான் ஜெ.வால் வந்தது. இப்போதும் நினைத்தால் வலிக்கிறது. எங்கள்  தலைவர் கலைஞரை கதறக் கதற கைது செய்து இழுத்துப் போனார்களே? நான் அப்போது, அருகே இல்லாமல் போய்விட்டேன். இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். காரணம் குற்றப்பரம்பரை என்று எங்களைச் சொல்வார்கள். தனது ரயில் சென்னை செங்கோட்டை நோக்கிப் போவதாக ஜெ.’சொல்கிறார். அது டெல்லி செங்கோட்டை நோக்கிப் போகவில்லை. தென்காசி அருகே இருக்கும் செங்கோட்டை நோக்கித்தான் அது போகிறது. போகிற போக்கில் தா.பா.வை யும் ஜி. ராமகிருஷ்ணனையும் பிளாட்பாரத்திலேயே விட்டுவிட்டு போகிறது. அவர்கள் வழிதெரியாமல் 
தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் தயாநிதி :


இந்த ஆட்சியின் சாதனைகள் என்ன வென்றால் ஜெய லலிதாவின் மிடாஸ் நிறுவனத்திலிருந்து டாஸ்மாக்குக்கு சப்ளை செய்வதுதான்.. அவருக்கு கேப்டனைத்தான் பிடிக்காது.. ஆனால்.. கேப்டன் ரம்.. கேப்டன் விஸ்கி.. கேப்டன் பிராந்தி எல்லாம் பிடிக் கும்.. ஏன் சொல்றேன்னா.. ஒரு மாசத்துக்கு 13 லட்சம் கேஸ் மிடாஸ்ல இருந்து டாஸ்மாக்குக்கு போகுது.. இதுல மாதம் ஒன்றுக்கு ரூ.110 கோடி அவங்க சம்பாதிக்கிறாக.. வருஷத்துக்கு ரூ.1320 கோடி.. மூணு வருஷத்துல ரூ.3960 கோடி.. இது சாதனைதானே? 

சேலத்தில் குஷ்பு :


ரெண்டரை வருஷமா மின்வெட்டுத் தொல்லை, விலை வாசிப் பிரச்சினைன்னு மக்கள் கஷ்டப்படறாங்க. தமிழகத் தையே காப்பாத்த முடியாதவர், இப்ப பிரதமர் கனவில் மிதந்துக் கிட்டிருக்கார். கலைஞர் சுட்டிக்காட்டுபவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர். அந்த ஆளுமை கலைஞருக்கு மட்டுமே உண்டு. 90 வயதிலும் 16 வயது இளைஞராக, தமிழுக் கும் தமிழர்களுக் கும் பாடுபடுகிறார். ஏற்காட்டில் பணத்தை வாரி வாரி இறைத்தீர் கள். என்ன ஆனது. அப்படியிருந்தும் 70 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். 

சிவகங்கையில் சென்னை மாஜி மேயர் மா.சுப்பிரமணியன் :


இந்த ஆட்சியில் மக்கள் ஒருவித பயத்துடனேயே உயிர்வாழ வேண்டியிருக்கு. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய போலீஸ், அ.தி.மு.க.வுக்கு கட்-அவுட் வைக்கவும், அவைகளைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மக்களைப் பற்றி ஜெயலலிதாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் கட்சியை நாத்திகக் கட்சி என்று சொல்கிறார்கள். இதோ அமர்ந்திருக்கிறாரே பெரியகருப்பன். அவர் கடந்தமுறை எங்கள் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது ஏராளமான கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியிருக்கிறார். இப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா? அவர் என்ன செய்திருக்கிறார் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?


தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. :


இன்னைக்கு கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா பேசியதை டி.வி.யில் பார்த்தேன். அவங்களுக்கு மத போதகரா ஆகணும்ங்கிற விருப்பம் வந்துடுச்சான்னு தெரியலை. இறை நம்பிக்கை ரொம்ப முக்கியம். இறை நம்பிக்கை இல்லாவிட்டால் வளர்ச்சியடைய முடியாது. அந்த நம்பிக்கை, ’தான்’ என்கிற அகந்தையை அழிக்கும்ன்னு, அவங்க சொல்லியிருக்காங்க. ஆனா அவங்க வச்சிருக்கும் இறைநம்பிக்கையால், அவங்கக்கிட்ட இருக்கும், ’தான்’ என்கிற அகந்தையையே அழிக்க முடியலை. கட்சிக்கு அண்ணா தி.மு.க.ன்னு பேர் வச்சிருக்காங்க. அண்ணாவின் தலைவர் யார்?. தந்தை பெரியார் அல்லவா? அவர் ஊரறிந்த நாத்திகவாதி. அந்த சிங்கத்தின் பகுத்தறிவுக் குரல், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்ததால்தான் இன்னைக்கு சமூக நீதியே ஏற்பட்டிருக்கு. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வளர்ச்சி அடைய  முடியாதுன்னு சொல்றாங்களே, அப்ப தந்தை பெரியார் பெரிய தலைவரா வளரலையா? அண்ணா வளரலையா? கலைஞர் வளரலையா? நான் அவரிடம் கேட்கிறேன், சமூக நீதின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உயர்ந்த ஜாதியிலே பிறந்ததால் உங்களுக்கு அது தெரியலை என்று நான் சொல்லவரவில்லை. உங்களுக்கு மக்களின் உணர்வு தெரியாது.  இங்க முதலமைச்சரா இருக்கும் போதே, கொடநாட்டில் போய் உட்கார்ந்துக்கறீங்க. பிரதமரா ஆனா என்ன செய்வீங்க? எங்காவது வெளிநாட்டில் போய் உட்கார்ந்துக்கிட்டு ரிமோட் கண்ட்ரோல் மூலமா ஆட்சி நடத்துவீங்களா

ad

ad