புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013



 
திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் புதன்கிழமை (25.12.2013) செய்தியாளர்ளின் கேள்விக்கு பதில் அளித்த கலைஞர் இவ்வாறு கூறியுள்ளார். 


அதன் விபரம் வருமாறு:

கேள்வி :- தி.மு.கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று உங்கள் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?
கலைஞர் :- அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லையே!
கேள்வி :- ஒரு கூட்டத்தில் பேசும்போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு. கழகக் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று பேசியிருப்பதால், அப்படி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
கலைஞர்:- அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி :- காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறதே, இது தேர்தலுக்காகச் செய்யப்படும் மாயையா?

கலைஞர் :- தெரியாது.

கேள்வி :- தமிடிநநாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நிலவுகின்றன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிற்குச் சென்று விட்டாரே?

கலைஞர் :-
 கொடநாட்டிற்கு அந்த அம்மையார் செல்வது என்பது வழக்கமான ஒன்று.

கேள்வி :- நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர்களை வஞ்சிக்கின்ற காரியமாக இதைக் கருதலாமா?

கலைஞர் :- தி.மு. கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப்பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

கேள்வி :- அ.தி.மு.க. பல்வேறு பொதுக் கூட்டங்களிலும், பொதுக் குழுவிலும், இன்று எம்.ஜி.ஆர். நினைவகத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலும் உங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும், தீய சக்தி என்றும் கடுமையாக விமர்சிக்கிறார்களே?

கலைஞர் :- அ.தி.மு.க. வினர் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைக் கடுமையாகத் தாக்கி பஜனை பாடியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாறு பதில் அளித்தார்.

ad

ad