புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013

 தி மு க,  தே ,தி மு க கூட்டணிக்கு  சாத்தியமான கலைஞரின் பேட்டி 
டப்பது ரம்மி ஆட்டம். எதிரில் 5 சீட்டுகள் இருக்கின்றன. தேவைப்படுவது ஒற்றை சீட்டுதான். எதை எடுத்தால், டிக் அடிக்கலாம் என்கிற அனுமானம்தான் இப்போது மிக முக்கியம். இப்படிச் சொல்பவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அவர்கள் ரம்மி ஆட்டம் என்கிறார்கள். அவர்களின் தலைவர் விஜயகாந்த்துக்கு முன்பாக இருக்கும் அந்த 5 வாய்ப்புகள்… 1. எம்.பி. தேர்தலைப் புறக்கணிப்பது. 2. தனித்துப் போட்டியிடுவது. 3. காங்கிரசுடன் கூட்டணி. 4. பா.ஜ.க.வுடன் கூட்டணி. 5. தி.மு.கவுடன் கூட்டணி. இந்த ஐந்தில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அதனால்தான் கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது, "அ.தி.மு.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பேன்' என்று விஜயகாந்த் பேசினார் என்றும் தே.மு. தி.கவினர் சொல்கிறார்கள். இதற்குக் காரணம், தே.மு.தி.கவின் கதையை முடிப்பது என்பதில் அதிதீவிரமாக இருக்கும் ஜெ.வின் நடவடிக்கைகளைத் தடுத்து, தனது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் விஜயகாந்த் இருப்பதையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஐந்தில் எது அவரது பெஸ்ட் சாய்ஸ்?


தேர்தல் புறக்கணிப்பு?

தே.மு.தி.க பொதுக்கூட்ட மேடை களிலேயே எம்.பி. தேர்தல் புறக்கணிப்பு பற்றி விஜயகாந்த் பேசியிருக்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் கட்சி யின் இலக்கு என்றும் சொல்லியிருக்கிறார். எனினும், இப்போதுள்ள நிலையில் எம்.பி. தேர்தலைப் புறக்கணித்தால் அது கட்சிக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும். ஏற்காடு இடைத்தேர்தலைப் புறக்கணித்த போதே, இங்குள்ள களத்தைவிட்டுட்டு, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடுவது தேவையா என்ற குரல்கள் கேட்டன. எம்.பி. தேர்தல் களத்தைத் தவறவிட்டால், எதிர்காலத்தில் மக்களின் ஆதரவும் குறைந்துவிடும், தேசிய கட்சிகளின் பார்வையும் மாறிவிடும் என்பதை விஜய காந்த் உணர்ந்தே இருக்கிறார்.

தனித்துப் போட்டி 

இந்த ரிஸ்க்கை இப்போது எடுக்க அவர் தயாராக இல்லை என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். ஒரு சில இடங்களையாவது ஜெயித்தால்தான் மாநில அளவில் செல்வாக்கும் தேசிய அளவில் மரியாதையும் கிடைக்கும் என்பது விஜயகாந்த்தின் கணக்கு. அத்துடன், களத்தில் இறங்கும் கட்சியின் வேட்பாளர் களும் வெற்றிக்கான வழி இருந்தால்தான் செலவு  செய்வார்கள். ஏதேனும் ஒரு கூட்டணி அவர்களுக்குத் தேவை.

காங்கிரஸ் கூட்டணி 

கூட்டணியில் முதல் சாய்ஸ் காங்கிரஸ்தான். ஏனென்றால் ராஜ்யசபா தேர்தலின்போதே சோனியாவின் நம்பிக்கைக்குரிய அகமது பட்டேலிடமிருந்து விஜயகாந்த்துக்கு சிக்னல் கிடைத்தது. தற்போது தேர் தலில் கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு எப்படி என்று சர்வேயும் எடுக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அதிர்ச்சிகரமாக இருந்ததால், காங்கிரசுக்கான கதவை மனதளவில் மூடிவிட்டார் விஜயகாந்த் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல் கிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணி

பா.ஜ.க.வின் முதல் சாய்ஸ், அ.தி.மு.கவின் ஆதரவுதான். இதை விஜய காந்த்தும் அறியாமல் இல்லை. தனது கட்சியை அழிக்கத் துடிக்கும் ஜெ.வுடன் தேர்தலுக் குப்பிறகுகூட கூட்டணி இல்லை என்ற உத்தரவாதத் தை பா.ஜ.க தலைமையிடமிருந்து எதிர்பார்க்கிறார். வைகோ, அன்புமணிக்கு வந்தது போல் சுதீஷுக்கும் அழைப்பு வந்துள்ளது. யாரும் பா.ஜ.க.வுடன் பேச வேண்டாம் என விஜயகாந்த் தடை போட்டிருப்பதை கடந்த நக்கீரன் இதழிலேயே தெரிவித்திருந்தோம். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது.

ஜெ.வின் கனவுகளை இந்த எம்.பி. தேர்தலில் நொறுக்கினால்தான் தே.மு.தி.க.வைக் காப்பாற்றமுடி யும் என நினைக்கும் விஜயகாந்த் அதற்கான வாய்ப்பு களையே அலசுகிறார். தனது கணக்கு நிறைவேற வேண்டும் என்றால் மிச்சமிருப்பது ஒரே வாய்ப்புதான் என்பதை அவர் புரிந்திருக்கிறார்.


தி.மு.க கூட்டணி

ஆளுங்கட்சியான அ.தி.மு.கவை நேரடியாக எதிர்கொள்ளும் வலிமையுள்ள ஒரே கட்சி தி.மு.க தான் என்பதும், ஏற்காடு இடைத்தேர்தலில் அதன் டெபாசிட்டை காலி செய்யவேண்டும் என அ.தி.மு.க வரிந்துகட்டியபோதும் 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தன் பலத் தை நிரூபித்திருப்பதையும் உணர்ந்துள்ள விஜயகாந்த், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஜெ.வுக்கு கடிவாளம் போட்டு, கட்சியைக் காப்பாற்றலாம் என நினைக்கிறார். அவருடைய கட்சியிலும் குடும்பத்திலும் அதற்கு ஆதரவான குரல் கள் கேட்டாலும் மாற்றுக் கருத்துகளும் ஒலிக்கின்றன. 2011-ல் அ.தி.மு.க கூட்டணி, 2014-ல் தி.மு.க கூட்டணி என்றால், 2016-ல் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தை கேப்டன் இழந்துவிடு வார் என்று அவரிடம் சொல்லப்பட்டுள்ளது. ஜெ.வின் தீவிரத்தால் கட்சியை இழந்துவிட் டால் முதல்வர் வேட்பா ளர் என்ற பேச்சுக்கு இட மில்லாமல் போய்விடும் என்றும், இப்போதைக்கு தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளலாம். சட்டமன்றத் தேர்தலில் வேறு முடிவு எடுக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தரப்பிலும் கலைஞரிடம் மு.க.ஸ்டாலின், நம் பக்கம் தே.மு.தி.க வர விரும்புகிறது. வாக்குவங்கி உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தான் ஆளுங்கட்சியான அ.தி.மு.கவை எதிர்கொள்ளமுடியும் என்று சொல்லி யிருக்கிறார். 

கலைஞரைப் பொறுத்தவரை, தி.மு.க பக்கம் வரும் கட்சிகளை சேர்த்துக்கொள் வது, அதற்காக யாரையும் தேடிப்போவ தில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஸ்டாலினும் அவருக்கு நெருக்கமானவர் களும் தே.மு.தி.க தங்கள் பக்கம் வரும் என்ற நம்பிக்கையைத் தெரிவிப்பதுடன், உறவுக்கான முயற்சிகளையும் வேகப்படுத்தி யிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிவாலயத் தரப்பினர்.

-நமது நிருபர்


 உஷ்!

பேருந்துக்குப் பதிலாக சிற்றுந்துகளும் வந்துவிட்டன, தலைநகரில்.. ஆளு(ம்) ந(ப)ரின் மகனின் நிறுவனத்தின் மூலம் பயணச்சீட்டு இயந்திரங்களை இறக்கிவிட்டு உள்ளனர். இதனால் ஒரு பயணச்சீட்டு வழங்க அரை நிமிடம்வரை ஆகிவிடுகிறதாம். இன்னும் சில கோளாறுகள், பயணி களுடன் வாக்குவாதம், தேவையில் லாத வம்புகள்.. என இம்சைகள் அதிகமாக... ’பழையபடி, "சீட்டைக் கிழித்துக் கொடுக்க விட்டாலே நல்லா இருக்கும்'’என்கிறார்கள், நடத்துநர் கள்.

ad

ad