26 டிச., 2013

அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் 3,70,000 பேர் மின்சாரமின்றி தவிப்பு 
அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில்
7,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தங்களின் குறிப்பிட்ட பயண அட்டவணையின்படி கிளம்ப முடியாமல் காத்திருந்தன. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்லமுடியாமல் பயணிகள் தடுமாறினர். இந்தப் புயலின் தாக்கத்தில் அமெரிக்காவில் குறைந்தது 11 பேர் பலியாகியிருக்ககூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் பல மாநிலங்களிலும் மின்சாரமின்றி தவிக்கும் மக்களுக்காக அவசரப் புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மிக்சிகன் நகரில் 2,50,000 பேர் மின்சார இணைப்பு சீரமைக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். ஆனால் சிதைந்துள்ள இணைப்புகளை மீண்டும் சீராக்க நாட்களாகலாம் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் மைனே நகரில் 1,00,000 பேருக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் சரி செய்யப்படாத சாலைகளும், நடைபாதைகளும் வழுக்ககூடிய அபாயம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
article-0-1A47286700000578-540_964x610
article-2528595-1A45D5CE00000578-703_634x420
article-2528791-1A474A9900000578-776_964x627