26 டிச., 2013

 மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தேசிய பௌத்த சங்க சபை அழைப்பு
கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு இலங்கையின் தேசிய சங்க சபையின் தேசிய அமைப்பாளர் வணக்கத்துக்குரிய பஹியங்கல ஆனந்தசங்கர அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின தென்பகுதி சிங்களவர்களின் தாயகம். வடக்கு, கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்று அண்மையில் இலங்கை கத்தோலிக்க சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது இலங்கையின் பிரச்சினையை பெரிதாக்கவே உதவும் என்று சங்க சபை குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்கனவே பல புத்தர் சிலைகள் இருந்த போதும், தற்போது அது அகற்றப்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் பேசிய வட்டஹென விஜித தேரர் தெரிவித்தார்.

வெற்றிக்கொள்ள முடியாத யுத்தத்தை, வத்திக்கான் மற்றும் இலங்கை கத்தோலிக்க சபையின் உதவியுடன் வெல்ல விடுதலைப்புலிகள் முனைவதாக அவர் குறிப்பிட்டுள்ள