-

19 மே, 2014


என்ன பதவி வகிக்க விருப்பம்? அத்வானியுடன் நரேந்திர மோடி ஆலோசனை
பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி டெல்லியில் உள்ள குஜராத் பவனில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களான அனந்த்குமார், ராஜஸ்தான்
மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, நாகாலாந்து முதலமைச்சர் நிபியூ ரியோ ஆகியோர் சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் மோடி பா.ஜ.க மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்தார். அப்போது அவர் புதிய அமைச்சரவையில் அத்வானி என்ன பதவியை ஏற்க விரும்புகிறார் என கேட்டதாக தெரிகிறது. 
அத்வானி புதிய அரசில் சபாநாயகராக பதவி வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மோடி, வாஜ்பாய் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

ad

ad