புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

இந்திய புலனாய்வு அதிகாரி இலங்கையில் கைது 
இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி  என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவௌ பகுதியிலுள்ள பரசங்கஸ்வௌ எனுமிடத்தில் வைத்து நேற்று  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டவரிடமிருந்து பல்வேறுப்பட்ட ஆவணங்கள், படங்கள் மற்றும் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர், விசேட துப்பறியும் பிரிவினரினாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

44 வயதான சந்தேகநபர் இலங்கையில், ஹமாஸ் ஜமால்டீன் என்ற பெயரிலேயே இருந்துள்ளார். அவர் வடக்குக்கு அடிக்கடி  பயணித்துள்ளதாகவும் குறித்த சந்தேகநபர் இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜயகுணவர்தனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், போலி கடவுச்சீட்டுடன் வெளிநாடுகளுக்கும் பல தடவைகள் சென்றுள்ளார். தனது முன்னைய கடவுச்சீட்டு தொலைந்துபோனதாகக் கூறி இலங்கையில் இவர் கடவுச்சீட்டைபெற்றுள்ளார்.

இந்தியாவில், கேரள மாநிலத்திலிருந்து 1995 ஆம் ஆண்டு இவர் வந்தததாகவும் டெக்னிக்கல் சந்தி, வவுனியா, அநுராதபுரம்,யாழ்ப்பாணம் மற்றும் பரஸன்கஸ்வௌ ஆகிய இடங்களில் ஹோட்டல்களில் வேலைசெய்ததாகவும் விசாரணைகளின் போது தெரிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ad

ad