புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழப்பு: முன்னாள் டிஜிபி தகவல்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதாக காவல்துறை முன்னாள் டிஜிபியும், போக்குவரத்து நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ப
ஸ்ரிசா கூறியுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணம் அடைந்திருப்பதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பஸ்ரிசா, உலக அளவில் ஆண்டு தோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12 லட்சமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இது 1.5 லட்சமாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.
அதிலும், மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அவ்வளவு அதிகமும் இல்லை, குறைவுதான். இந்த நிலையிலும், சாலை போக்குவரத்துத் துறையின் கீழ் சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு துறை ஒன்று உருவாக்கப்படவில்லை.
வாகன ஓட்டிகள் பலரும் சிக்னல்களை மதிக்காமல், மீறும் போதுதான் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதுமட்டும் அல்லாமல், சாலைகளில் உள்ளூர் மொழிகளில் சாலை விதிகள் எழுதப்படுவதும், பல வாகன ஓட்டிகளுக்கு முறையான சாலை விதிகள் கற்பிக்கப்படாததும், சாலைகளில் வேகத் தடைகள் முறையான அளவுகளில் அமைக்கப்படாமல், இரவோடு இரவாக எந்த அறிவிப்புப் பலகையும் இன்றி அமைக்கப்படுவதும் கூட பல விபத்துகளுக்குக் காணமாகின்றன.
எனவே, தற்போது அமைந்துள்ள புதிய அரசு, நிச்சயம் சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

ad

ad