புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் "ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய", சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்.

வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வரும் ரவியின் முத்த மகள் டெனிஸ்ட்ரிக்கா சாதாரண தரம் கற்று தேர்ந்து, உயர்தரத்துக்கு செல்கையில் "கண்பார்வை குறைபாட்டால்" தொடர்ந்து கற்க முடியாமல் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் பல பேரிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் இறுதியாக "சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய" நிர்வாகத்தை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொண்டு தனதும், மகளினதும் நிலைமையை கூறியபோது, "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்" செல்வி பரஞ்சோதி செல்வநிதியின் ஓராண்டு நினைவை ஒட்டி அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தின் மூலம் இந்த உதவியை இன்று வழங்கி இருந்தது.

இன்று அந்த மாணவியின் குடும்ப செலவுக்கென சிறியதோர்  நிதி உதவி அம்மாணவியின் தாயிடம் வழங்கப் பட்டதுடன், விரைவில் அம்மாணவிக்கு கண்ணாடியும் வழங்கப் படவுள்ளது.   

இந்த நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா முன்னாள் உபநகரபிதாவுமான சந்திரகுலசிங்கம் (மோகன்), கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்களான காண்டீபன், ஜெனார்த்தனன் மற்றும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) ஆகியோர் கலந்து கொண்டனர் .

மிக வறியநிலையில் தனது 5 பிள்ளைகளையும் படிப்பிக்க முடியாமல் அவதிப்பட்ட எமது  நிலை கருதி எனது  சகோதரி, எமது மகள்  டெனிஸ்ட்ரிக்காகாவை யாழ்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் கொண்டு போய் தனது செலவில் படிக்க வைப்பதாகவும், இந்த நிலையில் எனது மகளின் நிலைகருதி பல பேரிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் இருந்த இந்த உதவியை, வழங்கிய புலம்பெயர் (சுவிஸ்) வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்துக்கும், இதை ஏற்பாடு செய்து தந்த "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்துக்கும்" தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

புங்குடுதீவு & வட்டக்கச்சியையும் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டு அமரத்துவம் அடைந்த "செல்வி. பரஞ்சோதி செல்வநிதி" அவர்களின் ஓராண்டு நினைவை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரால் "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்" சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

ad

ad