புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014

பட்லரின் சர்ச்சைக்குரிய ‘ரன் அவுட்’ ஆட்டமிழப்பு சரியானதா? 12 வருடங்களின் பின்பு நேற்று 
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்றைய தினம் இடம்பெற்ற போது இடம்பெற்ற ஒரு ஆட்டமிழப்பு சர்வதேச
ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
 
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்த விதம் கிரிக்கெட்டில் மிகமிக அரிதாக இடம்பெறும் ஒரு ‘ரன் அவுட்’ முறையாகும்.
 
சச்சித்ர சேனாநாயக்க போட்டியின் 45ஆவது ஓவரின் முதல் பந்தினை வீச முற்படும்போது, பட்லர் எல்லைக் கோட்டை கடந்து (crease) ஓட முயன்றார், இதன்போது பந்தினை வீசாமல் சச்சித்ர சேனாநாயக்க இதனை நடுவரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
 
இந்நிலையில் இரண்டாவது முறையாக பட்லர் இதே தவறினை செய்ய சச்சித்ர ‘ரன் அவுட்’ செய்து அவரை ஆட்டமிழப்பிற்கான கோரிக்கையை முன்வைத்தார்.
 
போட்டியின் நடுவர், இது குறித்து இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யூஸின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இறுதியில்  விதிமுறைகளுக்கு அமைய ஆட்டமிழப்பு உறுதி செய்யப்பட்டு பட்லர் களத்திலிருந்து வெளியேறினார்.
 
1992ஆம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறானதொரு ஆட்டமிழப்பு நேற்று இடம்பெற்றுள்ளதுடன் தற்போது இந்த ஆட்டமிழப்பு பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது

ad

ad