புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


பெண் நீதிபதியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி; உறவினர்களுக்கு போலீஸ் வலை: உ.பி.யில் அதிர்ச்சி
உத்தரபிரதேசத்தில் அலிகாரில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஒரு பெண், அங்குள்ள நீதிபதிகள் குடியிருப்பில் முதல் தளத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். 


இந்த நிலையில் நீதிபதியின் உறவினர்களான பங்கஜ் குப்தா, கோபால் குப்தா ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் ஏணியைப் பயன்படுத்தி ஏறி, அவர்களது வீட்டுக்குள் நுழைந்தனர். நீதிபதியையும், அவரது சகோதரியையும் அவர்கள் இருவரும் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் எதிர்த்து போராடி, அலறினர். அப்போது அவர்கள் வாயில் அந்த ஆசாமிகள் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி, துணியை வைத்து அடைத்து கொல்ல முயற்சித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பினர். நீதிபதியும், அவரது சகோதரியும் மயங்கினர். 
மறுநாளில் வேலைக்காரப்பெண் வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்புறமாக பூட்டி இருப்பதைக் கண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது சகோதரிகள் இருவரும் மயக்கத்தில் இருந்தனர். மயக்கம் தெளிவித்து முதல் உதவி அளித்தபோது அவர்கள் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் விவரித்தனர். 
இதையடுத்து நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகாரின்படி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கைது செய்ய பரேலி மற்றும் பரூக்காபாத்திற்கு போலீஸ் படை அனுப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். நீதிபதியின் உறவினர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ad

ad