புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவ பிரதிநிதிகளின் விபரங்களை திரட்டும் மர்ம மனிதர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகளின் விபரங்கள் இனந்தெரியாதோரால் தொடர்ச்சியாக திரட்டப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வாறு சட்டத்திற்கு முரணாக் தொடர்ந்தும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகள் நிறுதுதப்பட்டு பல்கலைக்கழக சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தி, சுமூகமான நிலைமையை
ஏற்படுத்த வேண்டுமென்றும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகங்கள் மீதான அரசியல் தலையீட்டை நிறுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழ ஆசிரியர்கள் நாடாளாவிய ரீதியில் நேற்று அடையாள பணிப்புற்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கமைய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இந்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதன் போது பல்கலைக்கழக சமுகம் மீதான அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை கண்டித்தும் அநாமதேயமான வகையில் அதாவது சட்டத்திற்கு முரணாகச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் கலாநிதி கு. திருக்குமரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய மற்றும் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இனந்தெரியாதோரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு பல்கலைக்கழக சமுகத்திற்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதில் குறிப்பாக கிராம சேவகர் பிரிவு ரீதியாகவும், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட தரப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தகைய விபரங்களை இராணுவத்தினர் கோரி வருகின்றனர். இவ்வாறு விபரங்களைச் சேகரிப்பவர்கள் இரானுவத்தினர், புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸார் என்று தம் வசதிக்கு ஏற்ற வகையில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்திக் கொள்வதுமில்லை. உத்தியோகபூர்வமாக எதையும் கேட்பதுமில்லை. இந்நிலையில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இரானுவம் தலையிட வேண்டியதில்லை. ஆனால் இங்குள்ள நிலைமைகள் வேறு விதமாகவே இருக்கின்றது.
எனவே பல்கலைக்ககழ சமுகம் மீதான அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைகள் நிறுத்தப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகத்தில் சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இதனூடாக இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இதற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற போராட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஆசிரியர் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயந்து அனைவருமான இணைந்து செயற்படுவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad