புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014




நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் கட்சியின் வலிமையையும் வளர்ச்சியையும் பெருக்கு வதற்கேற்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலை செயல் திட்டக்குழுவின் கூட்டத்தை 2-ந் தேதி சென்னை அறி வாலயத்தில் கூட்டியிருந்தார் கலைஞர். இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதில் முக்கியமானதாக ஆளும் கட்சியினரால் கவனிக்கப்பட்டிருக்கிறது தேர்தல் ஆணையத்திற்கும் காவல்துறைக் கும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.

இந்த கண்டன தீர்மானத்தில், ""ஆளும் கட்சியான அ.தி.மு.க., தேர்தல் ஆணையத்தோடு எழுதப்படாத உடன் பாடு ஒன்றின் மூலமாக மிகப்பெரிய சதி செய்து பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டது'' என சுட்டிக்காட்டப்பட் டிருக்கிறது. இப்படி ஒரு தீர்மானம் வருவதற்கு சில பின்னணிகள் இருக்கிறது என்கிறார்கள். 

அது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், ""கலைஞர் தொடங்கி சாதாரண தொண்டர்கள் வரை  10 சீட்டுகளுக்கு குறையாத வெற்றி நமக்கு கிடைக்கும் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால்  ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாத நிலையை தேர்தல் முடிவுகள் சொல்ல, ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஆடித்தான் போனது. இதுபற்றி கலை ஞரை சந்தித்த கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் பலவிதமான கருத் துக்களை முன்வைத்த படியே இருந்தனர். மத்திய மாவட்ட மா.செ. ஒருவர், "குறிப்பிட்ட பகுதியில் உள்ள 600 வாக்குகள் நம் தி.மு.க.வுடையது. அந்த 600-ம் மிஸ்ஸாகக்கூடாதுன்னு நானே நேரில் நின்று அவர்களை பூத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனா, அந்த பகுதியில் அ.தி.மு.க.வுக்கு அதிகமாக விழுந்திருக்கிறது. அப்படின்னா ஏதோ சதி நடந்திருக்குன்னுதான் அர்த்தம்' என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.  

ஜெகத்ரட்சகன் போன்றவர்கள், "கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள் எல்லோரும் கடந்த ஒரு வருஷமா அவங் கவங்க நிக்கப்போற தொகுதியை நன்றாகவே கவனித்து வைத்திருந்தார்கள். அப்படியிருந்தும் அவர்களும் தோத்துப் போறாங்கன்னா… வோட்டிங் மெஷினில்தான் தில்லுமுல்லு நடந்திருக்கு' என்று விவரிக்க... அதை ஆமோதிக்கும் வகையில், "ஆமாய்யா….. கும்மிடிப் பூண்டியிலிருந்து கன்னியாகுமரி வரை எல்லா தொகுதிகளிலும் ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரேமாதிரி ஜெயித்திருக்கு ஆளுங்கட்சி. இந்த 3 வருஷத்துல அப்படி என்ன தமிழக மக்களை ஜெயலலிதா தங்கத்தாம்பாளத் தில் தாங்கிவிட்டார், மக்கள் மொத்தமாக அவரை ஆதரிக்க?' என்று சொல்லியிருக் கிறார் கலைஞர். 

இப்படிப்பட்ட விவாதங்கள் தினமும் நடக்க, ஒருநாள் அண்ணா பல்கலைக்கழக பேராசி ரியர்கள் சிலரை ஜெகத்ரட்சகன் கலைஞரிடம் அழைத்துப் போனார். பேராசிரியர்களிடம் 2 எலெக்ட்ரானிக் மெஷின்கள் இருந்தன. அவர்களோ, "தேர்தல் காலத்தில் பயன்படுத் தும் வோட்டிங் மெஷின் நம்பகத்தன்மை கொண்டது அல்ல' என்று சொல்லி தாங்கள் கொண்டுவந்துள்ள  மாடல் வோட்டிங் மெஷின் மூலம் அதை நிரூபித்துக்காட்ட, கலைஞர் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து போனார்கள். அப் போது, "நிச்சயம் வோட்டிங் மெஷினில் ஏதோ நடந் திருக்க வாய்ப்பிருக்கு' என்றனர் கலைஞரோடு சுற்றி நின்ற வி.ஐ.பி.க்கள். இந்த நேரடி அனுபவம் கலை ஞருக்கு ஏற்பட்டதால்தான் இப்படி ஒரு கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது'' என்று நம்மிடம் விவரித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பேசினோம். ""எங்களு டைய பெயர்களைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று சொல் லிவிட்டு, ""தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு சவால் கள் கொண்ட ஆராய்ச்சிகளை அவ்வப்போது நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். இந்தமுறை, இந்தியாவில் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தும் வோட்டிங் மெஷின் நம்பகத் தன்மை கொண்டதல்ல என்பதை நிரூபிக்க முடியுமாங் கிற ஆராய்ச்சியில் இறங்கினோம். வெற்றி கிடைத்தது'' என்று சொல்லிக்கொண்டே, ஒரு பெரிய பையில் இருந்து 2 மெஷின்களை எடுத்து மேஜை மீது வைத்தனர்.

ஒன்று, வாக்காளர்கள் வோட்டு போடும் வோட் டிங் மெஷின் மாதிரி மாடல் மெஷின் தயாரிக்கப் பட்டிருந்தது. மற்றொன்று போலிங் ஆஃபீசர் கட்டுப் பாட்டில் இருக்கும் கண்ட்ரோல் பாக்ஸ் மாதிரியான மாடல் மெஷின்.  வோட்டிங் மெஷினில் 6 பட்டன்கள் இருந்தன. முதல் 5 பட்டன்களில் கேண்டிடேட் 1, கேண்டிடேட் 2, கேண்டி டேட் 3, கேண்டிடேட் 4, கேண்டிடேட் 5 என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கடைசி பட்டனுக்கு நேராக நோட்டா என்று ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல, கண்ட்ரோல் பாக்சில் மொத்த வாக்காளர்கள், க்ளோஸ், ரிசல்ட் ஆகியவற்றிற்கான தனித்தனி பட்டன்களும், வோட்டு போட்டதும் பீப் சவுண்ட் வருவதற்கான லைட்டுகளும் என பூத்தில் தேர்தல் ஆணையம் பயன்    படுத்தும் கண்ட்ரோல் பாக்ஸில் இருப்பது போலவே அனைத்து பட்டன்களும் அதில் இருந்தன.

முதலில், கண்ட்ரோல் பாக்ஸில் எந்த வாக்கும் பதிவாகாமல் க்ளியராக இருப்பதை நம்மிடம் காட்டினார்கள் பேராசிரியர்கள். அதை நாம் உறுதிப்படுத்திக்கொண்டோம். 

வோட்டிங் மெஷினில் ஓட்டுப் போடச் சொன்னார்கள். 6 பட்டன்களையும் ஒவ் வொருமுறை அழுத்தி 6 வாக்குகளை பதிவு செய்தோம். அந்த 6 வாக்குகளும் ஒவ்வொரு வருக்கும் தலா 1 வாக்குகள் விழுந்திருப்பதை கண்ட்ரோல் பாக்ஸில் நம்மிடம் காட்டினார்கள் பேராசிரியர்கள். 

அடுத்து, ""இப்போ எந்த கேண்டிடேட்டை ஜெயிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?'' என்று பேரா சிரியர் ஒருவர் நம்மிடம் கேட்க, "கேண்டிடேட் 2' என்று சொன் னோம். உடனே  அவர்களில் ஒருவர் கேண்டிடேட் 2-க்குரிய பட்டனை ஒருமுறையும் நோட்டா பட்டனை 3 முறையும் சாதாரணமாக அழுத்திவிட்டு, ""இதுவரை 6 வோட்டு போட்டிருக்கீங்க. இப்போ மீண்டும் வோட்டு போடுங்க'' என்றார்.  

உடனே நாம் கேண்டிடேட் 2-க்கு மட்டும் ஒரு வோட்டுக்கூட போடாமல் கேண்டிடேட் 3-க்கு 6 ஓட்டுகளும் மற்ற 4  பேருக்கும்  தலா 1 வோட்டும் என மொத்தம் 10 ஓட்டுகளை பதிவு செய்தோம். அப்போ பேராசிரியர்கள், ""இப்போ தேர்தல் நேரம் முடிந்து விட்டது. இனி யாரும் ஓட்டு போட முடியாது'' என்று சொல்லி கண்ட்ரோல் பாக்சில் உள்ள க்ளோஸிங் பட்டனை அழுத்தி வோட்டுப் போடுவதை நிறுத்திவிட்டார். பிறகு நம்மிடம், ""மொத்தம் 16 ஓட்டுகளை பதிவு செய் திருக்கிறீர்கள். கேண்டிடேட் 2-க்கு மட்டும் 1 ஓட்டும் கேண்டிடேட் 3-க்கு துவக்கத்தில் 1 ஓட்டும் பிறகு 6 வோட்டும் போட்டிருக்கிறீர்கள். அப்போ 7 ஓட்டுகள்.  மற்ற 4 நபர்களுக்கு தலா 2 ஓட்டு என 8 ஓட்டுகளை பதிவு செய்துள் ளீர்கள். ஆக, மொத்தம் 16 ஓட்டுகள்.  சரி, இப்போ ரிசல்ட்டை பார்க்கலாம்'' என்று சொல்லி ரிசல்ட் பட்டனை அழுத்தி முடிவுகளை நம்மிடம் பேராசிரியர்கள் காட்டிய போது அதிர்ந்து விட்டோம்.  

கேண்டிடேட் 3-க்கு 7 வோட்டு விழுந்திருக்க வேண்டும். ஆனால், ஆரம் பத்தில் போட்ட 1 ஓட்டுதான் விழுந்திருந் தது. ஆனால் கேண்டிடேட் 2-க்கு 7 ஓட்டு விழுந்திருந்தது. மற்ற 4 பேருக்கும் தலா 2 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதாவது, எந்த வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கி றோமோ அவர் குறைந்த வாக்குகள் வாங்கி யிருந்தால், யார் அதிக வாக்குகளை வாங்கி யிருக்கிறாரோ அவரது வாக்குகள் இவருக் கும் இவரது வாக்குகள் அவருக்கும் மாறி விட வேண்டும் என்பதுதான் ப்ரோக்கிராம். 

எல்லா வோட்டிங் மெஷினிலும் நோட்டா பட்டன் மட்டும் கடைசியில் இருப்பதால் அதை மையப்படுத்தி ப்ரோக்கிராம் ஃபிக்ஸ் பண்ணுவது எளிதாக இருந்தது.  அதாவது, வாக்குபதிவு முடிந்ததும் க்ளோஸிங் பட்டனை அழுத்துவதற்கு முன்பு கண்ட்ரோல் பாக்ஸில் யாரை ஜெயிக்க வைக்க விரும்புகிறோமோ அந்த கேண்டி டேட்டுக்கு உரிய பட்டனை ஒருமுறை அழுத்திவிட்டு பிறகு நோட்டா பட்டனை 3 முறை அழுத்திவிட்டால் போதும். ரிசல்ட் மேலே சொன்னதுபோல மாறிவிடும். 

நோட்டா பட்டனை 3 முறைதான் அழுத்த வேண்டு மென்பது வறையறை அல்ல. ப்ரோக்கிராம் எப்படி உரு வாக்கியிருக்கிறோமோ அப்படி செயல்பட்டால் போதும். இதை நாங்கள் உருவாக்கும்போது 3 முறை அழுத்தினால் போதும் என்கிறபடி ப்ரோக்கிராம் செய்திருக்கிறோம். அதனால்தான் 3 முறை. கண்ட்ரோல் பாக்ஸில் சின்ன ஒரு டவுன் லோடை இறக்கிவிட்டால் போதுமானது. நாம் சொல்கிறபடி அந்த மெஷின் கேட்கத் துவங்கிவிடும். இப்படி நிறைய வழிமுறைகளில் வோட்டிங் மெஷினில் நம் இஷ்டத்திற்கு விளையாட முடியும். ஆக, வோட்டிங் மெஷின் என்பது நம்பகத்தன்மை கிடையாது என்பதையும் தில்லுமுல்லுகள் செய்ய வாய்ப்பு உண்டு என்பதையும் நிரூபிக்கவே இந்த ஆராய்ச்சி. அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மற்றபடி நடந்து முடிந்த தேர்தலில் இப்படி மாற்றம் நிகழ்ந்ததா? தவறுகள் நடந்ததா? என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது'' என்று விரிவாக விவரித்தனர் பேராசிரியர்கள். ஆக, பேராசிரியர்களின் இந்த நிரூபித் தலை நேரடியாக உணர்ந்ததினால்தான் இப்படி ஒரு கண்டன தீர்மானத்தை கலைஞர் கொண்டுவந்தார் என்பதை அழுத்தமாகவே சொல்கிறார்கள் தி.மு.க.வினர். இதற் கிடையே, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு ஆளும் கட்சி ஒதுக்கீடு செய்துள்ள வீடு விவகாரம் குறித் தும் தி.மு.க. மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

நம்மிடம் பேசியவர்கள், ""உத்தரபிரதேசத்தில் நொய்டாவில் ஜூலை 2011-ல் 35.25 லட்சம் ரூபாயில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார் பிரவீண்குமார். 2013 டிசம்பருக்குள் 34.90 லட்சம் கட்டிவிட்டார். அதே சமயம், சென்னை நெற்குன்றத்தில் சுமார் 85 லட்சம் ரூபாய் கொண்ட வீட்டை 2012 செப்டம்பரில் தமிழக அரசு தருகிறது. இந்தத் தொகையில் 2014 ஜனவரிக்குள் 40 லட்சத்தை கட்டி முடித்துவிட்டார் பிரவீண்குமார். ஆக, மாதம் 75,300 ரூபாய் சம்பளமாக வாங்கும் இவர், 26 மாதத்தில் 74.90 லட்சத்தை கட்டி முடித்திருக்கிறார் என்றால் எப்படி? கூட்டி கழிச்சிப் பாருங்கள் கணக்கு சரியாகும்'' என்று விவரித்து சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.

ad

ad