புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஆக., 2014

கௌதாரி முனையில் ஒரு கண்ணீர் கஜினி
 நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப்  போயுள்ளது.அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின்
ஒருவன் தான் சுயன். படிப்பில் படு சுட்டியாகவும்,துடிதுடிப்போடும் இருந்த சுயனின் வாழ்வை போர் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது.

                         
 
செல் ஒன்று அவன் தலையை பிளந்ததில்  அவன் உயிர் தப்பியதே அதிசயம் தான் என்றாலும்,இப்போது அவனை அங்கவீனமும்,இயலாமையும்  துரத்திக் கொண்டே இருக்கின்றன.
 
கஜினி என்ற ஒரு திரைப்படத்தில் நினைவை அடிக்கடி மறக்கின்ற பாத்திரத்தை போல இவனும் அடிக்கடி மறதி வியாதியால் அவதிப்படவும் செய்கின்றான்.அந்த சிறுவனின் வாழ்வு சிதைந்த கதையை தாயாரின் மொழியில் கேளுங்கள்.
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=162253374629509762#sthash.rjsQUc5r.dpuf